பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழவும்-இலக்கியமும்

நெஞ்சிற்கு இனிய மகிழ்வணங்கே வைகறையில் எழுந்து நீ கொஞ்சிப் பாடு, மனத்தைப் பற்றுக் கொண்டு வா செம் மதுவினை; அஞ்சி இமயவரம்பன் படைகள் மண்ணின் துகளாய் மாறின, விஞ்சும் கூதிர்காலம் செல்ல வேனிற் காலம் விரைகுதே!

காலைப் பொழுது, செம்மலர்த்தேன் மதுவைக் கனிந்து வார்த்திடு, மேலைப் புகழைப் பெருமைப் பளிங்கைப் பாறை மீது நொறுக்கிடு, பாலைக் கானல் நீரை ஒத்த கனவை முற்றும் விட்டொழி, வாலைக் குமரி தன்னை நாடு, மகர யாழை மீட்டிடு.

வெப்பம் தட்பம் பொருந்தி நின்ற விருப்பமான இனிய நாள், மப்புப் பணியால் செம்மலர்சேர் மாசனைத்தும் நீங்கிடும், மட்டிலாது மதுவை உண்க என்று மஞ்சள் மலரிடம் செப்பும் இனிய மொழியினாலே அல்லிசைப்புள் பாடிடும். புத்தாண்டின்பத் தென்றல் வந்து பூவின் கன்னம் வருடிடும் புற்றரைக்கண் நெஞ்சில் நெருப் பேற்று முகம் நின்றதே! செத்த நாள்கள் தம்மைப் பேசேல் சீரும் சிறப்பும் இல்லையே, இற்றை நாளே இன்ப நாளாம், நேற்றைக் கதைகள் ஏனடா?