பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம்-வாழ்வும் இலக்கியமும்

செம்மலர்கள் பூக்கும் பருவம் ஒடை ஒரம் செந்நீலம் இன்பவான் அணங்கை ஒத்த இரண்டு மூன்று மங்கையீர், பொங்கும் காலை மதுக் கொணர்வீர், மதுவில் பொலியும் மாந்தர்கள், இங்குக் கோயில் எண்ணல் இல்லை, துறக்கம் அவருக்இல்லையே. 120

பூக்கள் புற்கள் புதுமைகொண்டு மகிழ்வில் பொலியும் இளைஞனே, நோக்கி நுகர்க்க இன்பம் துய்ப்பாய், கிழமை ஒன்றில் நொடிந்திடும், பார்க்கும் போதே மலரைப் பறித்துக் கொள்நீ மதுவைப் பருகுவாய், பூக்கள் உதிரும் புற்கள் மறையும் புதுமைக்கே நீ முந்துவாய்.

புதிய ஆண்டின் குவளைப் பூப்போல் மதுவின் குவளை ஏந்துவாய், குதிகொள் வாய்ப்புக் கிடைக்குமாயின் குவளைக்கண்ணி மாதொடும் மதுகையோடும் மது அருந்து, நீல வானக் கோள்களின் விதிக்குட்பட்டு வீழ நேரும், வாழும் நாளை வெற்றிகொள்.

செங்கருமை நிறம்புனைந்து செழித்து மலர்கள் பூக்கையில் செம்மலர்த்தேன் ஊடே தென்றல் சிந்து பாடிக் களிக்கையில் அங்கம் பொங்கும் மங்கையோடும் அருமை மதுவை உண்டபின், கிண்ணம் நொறுங்கக் கல்மீது எறிவோன் உணர்வு தெளிந்த மாந்தனாம்.

70 த. கோவேந்தன்