பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*-torstvirti ongerů Slošálw{più

வேனிற் பருவகால வரவும் கூதிர்ப் பருவப் பிரிவும் நம் நானிலத்து வாழ்க்கை ஏட்டின் பக்கங்களைப் புரட்டிடும், வீணரில் கண்ணிர் எதற்கு? விம்மும் மதுவை உண்பாய் அறிவரும், பூணும் துயரின் நஞ்சை மாற்றும் மருந்தாய் மதுவைப் புகன்றனர். உலகம் உன்றன் பெயரை மறந்தே ஒழிந்து அழிந்து போகுமுன் கலய மதுவை உண்பாய் கனக்கும் நெஞ்சின் கவலை போக்கிடும். கலகலத்தே உன்றன் உடலும் கட்டிழந்து போகுமுன் அலையலையாய்ச் சுருண்ட கூந்தல் அள்ளி அணங்கைத் தழுவுவாய்.

நாளைக் கவலை நமக்கு வேண்டா நண்பனே, நீ வந்திடு இவ் வேளைப் பொழுதை வாழ்வினுக்கு விருந்தாய் ஏற்றுக் கொண்டிரு, நாளை என்று நாள் கழிப்பின் நாளையோடு ஏழாயிரம் பாழில் ஆண்டில் கைதுறக்கப் பட்டவர்போல் ஆவமே. 130 கொள்கை அற்ற கோள்களின் கீழ் உள்ளாய் அமைதியாய் இரு, தள்ளும் அழிவு நிறைந்த உலகில் உள்ளாய் மதுவை அருந்திடு, உள்ள தோற்றம் இறுதி யாவும் ஒரு பிடிக்குள் மண்ணடா, உள்ளாய் அல்லை, நிலத்தில் மீதில் மண்ணுக்குள்ளே வாழ்கிறாய்.

73 த. கோவேந்தன்