பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்காம் வாழ்வும் இலக்கியமும்

மதுவும் மதுவை வழங்குவோனும் இன்றி உலகம் பொய்யடா, மதி விரும்பும் கண்ணன் குழலின் பண்இன்றி வாழ்வேதடா? பொதுவில் இந்த உலகை நோக்கின் பொருந்தும் விருந்துக் கூடத்தில் மது அருந்தி வாழ்வதன்றி. மற்றை யாவும் வெறுமையே. உள்ளதோடும் இலாமை எண்ணி உளையும் நாள்கள் எத்தனை: உள்ளம் மகிழ்வில் திளைக்கலாமா? எத்தனை நாள் இவ் வினா? கள்ளை ஊற்றிக் கலம்நிரப்பு - உயிர்க்கும் மூச்சை மீண்டும் நான் கொள்வதென்ன உறுதி அடடே மூச்சுக்கு உறுதி இல்லையே. காதலிருவர் கைகள் சேர்த்துக் களிப்பில் ஒன்றிடாவிடில் மோதும் களிப்பில் துயரை மிதித்து முன்னே செல்ல முடியுமா? போது விடியுங் காலை வரைக்கும் புளகித்தின்பம் கொள்ளுவோம் சாதல் நம்மைக் கொண்டபின்னும் தளிர்க்கும் காலை எண்ணில. நிலைத்த இன்ப எல்லை தேடி நெடிய ஆசையால் மதுக் கலத்தின் இதழில் இதழ்பொருத்திக் காயகற்பம் தேடையில் மெல்லவே தன் இதழை இதழில் இணைத்துச் சொன்ன சொல்.இது “களித்துண் மதுவை மீண்டும் இங்குக் கால் நீ வைப்பதில்லையே.” .

7式 த. கோவேத்தன்