பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழ்வும் இலக்கியமும்

அன்புத் தோழ, மது அருந்தி அளப்பில் மகிழ்வில் மூழ்குவாய், இன்மலர் முகத்தினாளை இறுகணைத்து மகிழுவாய், இந் நிலத்தின் முடிவில் ஏதும் நிலைத்திருப்ப தில்லையே, பின் எதற்குப் பேச்சாம்? இன்பப் பேறனைத்தும் துய்த்திடு. 140

போலி நடிப்பு யாவும் நாளைப் புறம்இழுத்து விலக்குவேன், கோல நரைகொள் மூப்பை முற்றும் கொழிக்கும் மதுவில் கழிப்பன் நான் சால எழுபதாண்டை எட்டித் தழுவி நிற்கும் என்உயிர் ஏல இப்போதின்றேல் இன்பம் எப்போது எனக்கு வாய்க்குமோ?

உலகக் கோளம் நமதெலும்பின் பந்து போன்ற உருவமே, சலசலக்கும் பொன்னி ஆறு நமது கண்ணிர் நிரம்பிடும், அலக்கழிக்கும் துயர் நெருப்பின் ஒரு பொறியே நிலையமாம்; விலகி நுகரும் ஒருகணந்தான்் வீறு மிக்க துறக்கமாம். தன்னலத்தின் நாட்டத்தில் நீ எத்துணை நாள் வாழ்குவாய்! இன்மை தேடி உண்மை தேடி எத்துணை நாள் ஒடுவாய்! துன்பம் தொடரும் வாழ்வை என்றும் களிப்பில் தோய்க்க வேண்டுமேல் இன்ப மது, உறக்கம் இரண்டில் ஒன்றில் மூழ்கி மகிழுவாய்.

76 த. கோவேந்தன்