பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழ்வும்-இலக்கிய இம்

உனது மகிழ்ச்சி மலரும் இன்றே உரிய விளைவைத் தந்தது, உனது கையேன் மதுவின் கிண்ண உறவில் ஒங்கவில்லையே? மனதுக்கேற்ற மதுவருந்து காலம் கேள்போல் கொடும்பகை,

இனி வராதே இத்தகை நாள், இன்புற்று அருந்து மதுவினை.

ஆன்மிகத்தின் உலகிருந்து விரைந்து நீயும் வந்துளாய், நான்கு பூதம் ஐம்புலன்கள் ஆறறிவினாலும் மற்று ஏழு கோள்கள் தம்மால் நீயும் இடைத் தடங்கல் எய்தியே ஏன் இங்குற்றோம், எங்கிருந்து வந்தோம் என்றும் அறிகிலாய் மீண்டும் எங்கே செல்வோம் அறியாய் மதுவில் களித்து மூழ்கிடு. நெஞ்சமே உன் கடக்கும் காலம் கலைக்குள்ளே ஆழ்த்தலால் பஞ்சபூதத் தோடுன் ஆவி பறந்தொழிந்து செல்வதால் உன்றன் உடல் மண்ணின் மீது பசும்புல் தோன்றி ஒங்குமுன் கொஞ்ச நாள் இப் பசும்புல் மீது குந்தி மதுவில் மகிழுவாய். 150 மது அருந்தும் கூலியாளின் மதுக்குடந்தான்் மன்னனின் பதுங்கும் கண்கள் அமைச்சன் நெஞ்சாங்குலையில் செய்த பண்டமாய் மதுவில் மகிழும் குடியன் கையில் தவழும் மதுவின் கிண்ணமோ மதுவில் சிவந்த மங்கை கன்னம் இதழ்களாலும் ஆனதே.

- –नाः த. கோவேந்தன்