பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ぐr)

உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்

உண்மையோடே உறுதிப்பாடும் உலகில் சற்றும் இல்லையால், உண்மை தேடி ஐயத்தோடும் உழலல் என்ன வாழ்வடா? கிண்ண மதுவைத் தவிர்த்திடாமல் விழிப்புக் கொள்வாய் மாந்தனே. உண்ணில் என்ன, தவிர்க்கில் என்ன? மாந்தன் என்றும்பேதையே!

ஒவ்வோர் முட்டாள் காலடிக்கீழ் உள்ள துகள்கள் யாவுமே கவ்வும் காதற் பெண்ணின் கையாய்க், கன்னமாய் முன் இருந்தன; ஒவ்வும் வெற்றி வளைவின் செங்கல் அமைச்சர் விரலாகவோ இவ் இடத்தை ஆண்ட மன்னன் தலை எனவோ இருந்ததே! மறைவு செய்யும் திரையின் ஊடு வழியை எவரும் கண்டிலர், நிறைந்த இயற்கை வாழ்வின் கமுக்க நிலைமை யாரும் கண்டிலர், இறந்த பின்னர் மண்ணிலன்றி எங்குவேறு புகலிடம்? நிறைவிலாத கதை இதாகும் நெஞ்சம் மகிழக் குடித்திடு. உறங்கலானேன் அறிஞன் ஒருவன் என்னிடத்தில் உரைத்தனன்: உறங்கினோர்க்கு மகிழ்வின் மலர்கள் உகப்பளித்தல் இல்லையே, உறங்கல் தான்ும் சாக்காடாகும், ஏன் உறங்கிச் சாகிறாய்? கிறங்கும் மதுவை உண்டு மகிழ்வாய், மண்கீழ் உறங்கல் உறுதியே.