பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழ்வும் இலக்கியமும்

இன்ப வேனிற் காலை நெஞ்சிற்கு இனிய அணங்கு போல்மகள் நன்செய் ஒரம் நின்று கொண்டு நயந்து மதுவை ஈவளேல் இந்தச் செய்கை தகுதிக்கேடாம் அன்பர் இழிஞர்; ஆயினும் இன்பத் துறக்கம் வேறு தேடின் இழிந்த நாயின் கடையன் நான். 160 உயிர்ப்பிருந்து பிரிந்து போதல் உலகில் என்றும் உறுதியே, உயிர்க்கும் வாழ்வின் புதிர்த்திரையின் உட்புறம் நீ மறைகுவாய், அயிலுவாய் நீ மதுவை வந்தது எங்கிருந்தோ? அறிகிலாய் மகிழுவாய் நீ செல்வ தெங்கே என்ற புதிரும் அறிகிலாய்.

இருண்மை சூழ்ந்த வாழ்விலே நான் வாழ்கிறேன் என் செய்கைகள் மருண்மை குழப்பம் அழிவும் அதிகம் மனத்தில் அமைதி குறைந்தது, பெருமைக்குரிய கடவுள்தான்் இப் பேதுக்கெல்லாம் காரணம் அருமை நன்றி அவருக்காக, அவரே விடையைச் சொல்லட்டும்.

புலன்கள் ஐந்தும் உனது வாழ்வின் நிலைப்பை உறுதிப்படுத்தினும் நலன்கொள் உன்றன் உடம்பில் உயிர்நய மிகுந்த ஆடையாம், வலன்கொள் காப்பின் இடமாய் இருக்கும் உடலம் என்னும் குடிலினில் பலம் இலாத நான்கு முளைகள் பற்றில் இல்லை உறுதியே.

83 த. கோவேந்தன்