பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழ்வும் இலக்கியமும்

கொடிய வறுமைப் பாதையன்றிக் கொள்ளல் ஏதும் இல்லையே வடியும் குருதிக் கண்ணிர் கன்னம் கழுவிலன்றிப் பயனிலை, துடிக்கும் ஆர்வம் கொளுத்தல் ஏன்? தமைத்துறந்த தாயர்போல் ஒடித்துத் தன்னலத்தை தள்ளல் இன்றேல் ஒன்றும் உற்றிடா. மண்டை ஒட்டை, முகங்கள் தம்மைப் படைக்கும் ஆற்றற் பேரிறை கண்டவாறு தமது பணியில் என்றும் தவறு செய்கிறார். மண்டும் மதுவின் குடத்தை வனைவோன் நல்ல மாந்தன் இல்லையாம் என்னில், இந்தச் சுரக்குடுக்கை படைத்தோனை என் என்பதாம்?

புத்தம் புதிய செம்மலர்கள் உலகில் பூத்து மணக்கையில் முத்தம் ஈந்தென் அன்பே மதுவை முழுதும் வார்க்க ஏவிடு, பித்தர் சொற்கள், வானணங்கள் விண்கொள் மாடமாளிகை முற்றும், துறக்கம் நிரையம் யாவும் முழுமை இல்லை உளறல்கள். இந்த உலகில் உள்ள எவர்க்கும் உண்ணப் பாதி அப்பமும் குந்தி வாழக் குடியிருக்க வீடும் ஒன்று கொண்டவர், இங்கு யார்க்கும் ஆண்டை அல்லர், அடிமையரும் அல்லரே “என்றும் மகிழ்க”என்றவர்க்குச் சொல்க இன்ப வாழ்க்கையே.

88 இந்ெதன்