பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழ்வும் இலக்கியமும்

ஊழின் உழவன் நமை விதைப்பன் வளர்ப்பன், அறுப்பன் ஒய்விலான் ஊழிற்காக வருந்துதல் வீண் ஆக்கம் ஏதும் இல்லையே வாழ்த்தி மதுவை வார்ப்பாய் விரைவாய் வாகாய்க் கையில் கொடுத்திடு மூழ்குவேன் நான் மீண்டும் உலகில் வருபவைமுன் வந்தவை. 180

காலம் உன்னை வழிமறித்துக் கல்லறைக்குள் கொள்ளுமுன், கோலம் சிவந்த மதுவைக் கொணரச் செய்து வாங்கிக் குடித்திடு, ஏல மண்ணில் புதைத்து வைத்து மீண்டும் எடுத்துக் காத்திட ஆன செம்பொன் கட்டி அல்லை மதியிலி நீ அறிகுவாய்.

இறப்பின் கொடுமைப் புதிரை இதுநாள் வரைக்கும் எவரும் அவிழ்ந்திலர், பிறப்பின் நாளில் குறித்த எல்லை, பெயர்ந்தோர். அடியும் வைத்திலர், அறிவு கொள்வோன் அறிஞன் முதலாய் அனைவரையும் அளந்துளேன் பிறந்து பெண்ணின் மடிவளர்ந்தோர் பேதைமை கைக் கொண்டனர்.

நானிலத்தில் வரவு நோக்கேல் இருப்பதைக் கொண்டின்புறு, காலம் கொணரும் நன்மை தீமை கருத்தில் கொள்ளேல் புறக்கணி, ஏன மதுவைக் கையில் கொள்க இனிய மகளைத் தழுவுவாய் ஆன இவைதாம் விரைவில் கழியும், அடுத்த நாள்கள் மீண்டிடா.

89 த. கோவேந்தன்