பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்காம் வாழ்வும் இலக்கியமும்

மது அருந்து, மண்டி நிற்கும் மாடனைத்தும் போக்கிடும், இதுவதென்னும் எழுபத்திரண்டு கருத்து முரணைத் தீர்த்திடும், மது அருந்து விலக்கிடாதே, மடுக்கும் ஒருவாய் மதுவினால் சிதைக்கும் நோய்கள் பத்து நூறும் தீர்த்து மகிழ்வைத் தந்திடும். நெருப்பில் பாய்ந்தும் புத்துயிர்கொள் நிகரில்லாத பறவைபோல் அருமறைப்பில் நெஞ்சத்தறிவின் கமுக்கம் அனைத்தும் காத்திடு பெருங் கடற்கண் அழுச் சிப்பி பேணி மழைநீர் மறைத்ததால் அருமை வாய்ந்த பெருமைக்குரிய அழகு முத்தாய் ஆனதே. இன்மணத்தேன் மலர்முகத்தைப் பனியின் துளிகள் கழுவையில் செந்நீல மலர்கள் பசம்புல் வெளியில் ஒடிந்து வீழ்ந்திடும் முந்தித் தலையை நிமிர்த்தி நிற்கும் முகைகள் தம்மை விரும்புவேன், இன்னும் அவற்றின் இடையின் ஆடை கசங்கவில்லை என்பதால். 190 என்றன் மனது கல்வி அறிவை என்றும் இழந்ததில்லையே, இன்னும் எனக்கு விளங்கிடாத மறைபுதிர்கள் இல்லையே பன்னும் எழுபதாண்டு வாழ்வைப் பகலும் இரவும் எண்ணினேன் என்ன கற்றேன? கற்கப்பட்டன எவையும் இல்லை என்பதே.

91 - த. கோவேந்தன்