பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்காம் வாழ்வும்-இலக்கியமும்

மதுவின் கலய மூடி மாறன் அரசினும் இன்பளிப்பது, மதுவின் மணமோ மணிமேகலையின் அமுதசுரபிக் கொத்தது; விடியும்காலைப் பொழுதில் குடியன் விடும் கொட்டாவி அவ்வையார் அதியமானின் இறப்பின்காலை அழுத பாட்டின் உயர்ந்தது. 200

மது அருந்து மண்ணில் நிலைத்த வாழ்வுக்குரிய பேறது, புதுமையான இளைமை இவைப் பெருக்கின் மூல ஊற்றது, அது நெருப்பாய் மாறும், துயர்க்கு முற்றுப்புள்ளி வைத்திடும், மது அருந்து வாழ்க்கைக் குற்ற வற்றிடாத நீரது. குடிப்பதாயின் அறிவறிந்த மக்களோடு குடித்திடு, கொடிமலர்ப்பூங் கன்னப் பெண்கள் கூட இருந்து குடித்திடு, அடிக்கடி நீ குடித்திடாதே அதிகம் வேண்டா, அடங்கிடு, குடிப்பாய் அளவாய், இடை நிகழ்வாய்த் தனித்திருந்து குடித்திடு. இளைஞனே நீ எழுவாய், பொழுது விடிந்து காலை ஒளிர்ந்தது, பளிங்குக் கிண்ணம் நிறையச் சிவந்த மதுவை ஊற்றி மகிழ்ந்திடு நெளிந்து நெகிழ்ந்து விரையும் நிலையிலாத இடத்தில் இக்கணம் பொழுதை நீண்ட நாளாய்த் தேடினாலும் காணல் இல்லையே.

95 த. கோவேந்தன்