பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

ஆனால், பித்துப் பிடித்தவனைப் போல் இருந்த உமார் மீது கைவைக்கக்கூடிய தெம்பு, தைரியம் அந்த வீட்டிலேயிருந்த ஆண்களில் யாருக்கும் உண்டாகவில்லை. பெண்கள் மட்டும் வாயினால் கண்டபடி ஏசினார்கள். கடைசியாக உமார், தானாகவே அந்த ஏச்சுக்களைத் தாங்க முடியாமலோ என்னவோ, அந்த விட்டு வாசலைவிட்டு வெளியேறினான்.

எங்கெங்கோ சுற்றிவிட்டு நெடு நேரத்திற்குப் பிறகு, இரத்தினக்கடை ஒன்றிலே நீலக்கற்களை ஆராய்ந்து விலைபேசிக் கொண்டிருந்த டுண்டுஷ் உருவத்தைக் கண்டான் உமார். தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு டுண்டுஷ் இருந்த இடத்திற்கு வந்தான். தன்னுடைய கதையையும் தன் மனமுடைந்த நிலையையும் உடைந்த சொற்களால் அவனிடம் தெரிவித்தான். நீலக்கல்லை ஆராய்பவன் போலத் தோன்றினாலும், டுண்டுஷ் விஷயத்தை ஊன்றிக் கவனித்தான். அந்தப்பெண் சாதாரணப் பாடகியாகவோ, அடிமையாகவோ இருந்திருந்தால், தன் அதிகாரம், சூழ்ச்சி யெல்லாவற்றையும் பயன்படுத்தி அவளைத் தூக்கிக் கொண்டுவந்து உமாரிடம் ஒப்படைத்து விடுவான்.

ஆனால் அவளோ இஸ்லாமியன் ஒருவன் வீட்டின் அந்தப்புரத்தில் வசிப்பவள்! அவள் தன் கணவனுடைய சொத்து! திரைக்குப் பின்னாலே இருக்கும் முக்காட்டுப் பெண்கள் விஷயத்திலே தலையிடுவதென்பது நிசாம் அவர்களுக்கே பிடிக்காத விஷயம்! பெண்களைத் திரைக்குப் பின்னால் வைத்துப் பாதுகாப்பது இஸ்லாமிய மதச்சட்டம். அந்தச் சட்டத்தை வெளிப்படையாக எதிர்ப்பதென்பது யாரும் கனவில் கூடக்காண முடியாத விஷயம்! அதுவும் தவிர, யாஸ்மி உமாரைத் தன் அன்புத் தளையிலே சிக்க வைத்திருக்கிறாள். தன் ஆதரவில் வாழும் உமார் ஒரு பெண்ணுக்கு ஆட்பட்டு நடப்பதையும் டுண்டுஷ் விரும்பவில்லை! பல பெண்களோடு, அவன் தொடர்பு கொண்டிருந்தாலும்கூட அதனால் கெடுதல் இல்லை. மேற்கொண்டு அவர்களை ஒற்றர்களாகவும் வசப்படுத்திக் கொண்டு பலன் பெறலாம். ஆனால், யாஸ்மி போன்ற ஓர் இளம்பெண், முற்றிலும் காதல் வசப்பட்ட ஒரு பெண் எப்போதும் தன் நோக்கங்களுக்கு ஆபத்தானவளாக இருப்பாள். ஆகவே அவளுடைய தொடர்பு உமாருக்கு இருப்பது என்பது தன்னைப் பொறுத்தமட்டில் கூடாத ஒரு