பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

உமார் பேசாமலிருந்தான் அவனிடம் எந்த விதமான திட்டமோ அதைப்பற்றிய எண்ணமோ கிடையாது.

“அவர் உன் ஆதரவாளர் என்பதை மறந்துவிடாதே! அவர் மனம் சமாதானம் அடையத் தக்கசெயல் ஏதாவது நீ செய்திருக்க வேண்டும். உன்னால் ஏதாவது பயன் இருப்பதாக அவர் கருத வேண்டும். உன்னுடைய அறிவினால், அறிவின் திறமையால் செய்யக்கூடிய ஒரு திட்டத்தைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் உன்னைப் பயன் உள்ளவனென்று கருதுவார்.”

“சரி! ஒரு புதிய பஞ்சாங்கம் அமைக்கப் போவதாக அவரிடம் அறிவிப்போம்!” என்றான் உமார். “என்ன? என்ன சொல்கிறாய்?” என்று தன்னையே நம்பமுடியாத குரலில் அதிர்ந்து போய்க் கேட்டான் டுன்டுஷ்.

“இப்பொழுதுள்ள பஞ்சாங்கத்தின்படி நாம் பலமணி நேரங்களை இழந்து வருகிறோம். தவறுதல் எதுவும் இல்லாமல் காலத்தைக் கணக்கிடுவதற்குரிய ஒரு முறையை நாம் ஏற்படுத்துவோம் என்று நான் சொல்கிறேன்” என்று சொன்னான் உமார் கம்பீரமாக.

டுன்டுஷ் அச்சங்கலந்த உள்ளத்துடன் உமாரை நோக்கினான். ஏற்கெனவே, வேலைக்காரர்கள் தங்கள் தலைவரின் விசித்திரப் போக்கைப் பற்றிக் கூறியிருக்கிறார்கள். இப்பொழுது உமாரின் விசித்திரப் போக்கைத் தானே நேரில் காண நேர்ந்ததும் அவனுக்குப் பயமாயிருந்தது. அவனுடைய பேச்சு பைத்தியக்காரத்தனம்ாக அவனுக்குத் தோன்றியது. இருந்தாலும் சிரித்துக் கொண்டே, “நான் பேசுவதில் ஏதும் தவறிருந்தால், கருணைகாட்டி மன்னித்து விடு. அல்லாவினால் படைக்கப்பட்ட நிலவு நமக்கிருக்கிறது. ஒவ்வொரு முறையும் முதற் பிறையுடன் அது வெளித் தோன்றும்பொழுது நம்முடைய மாதத்தின் முதல் நாள் தொடங்குகிறது. நிலவைக் காட்டிலும் சிறந்த காலத்தை அளக்கும் கருவியை எந்த மனிதனாலும் செய்யமுடியாதல்லவா? என்று கேட்டான் டுன்டுஷ்.

“ஏன் செய்ய முடியாது? எகிப்தியர்கள் செய்திருக்கிறார்கள்! கிறிஸ்துவர்களும் கூடச் செய்திருக்கிறார்களே! இதோ நீ இங்கே
உ.க. 8