பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

ஊன்றி வைத்திருக்கிறாயே, மரத்துண், அது ஓடும் காலத்தை அளப்பதற்கு உதவாது. விளையாடும் சிறுவர்க்கு வேண்டுமானால் பயன்படும்! வந்து பார்” என்று ஆத்திரமாகக் கூறிவிட்டு, டுன்டுஷை இழுத்துக் கொண்டு போனான். வெயிலின் மூலமாக நேரத்தை அறிந்து கொள்வதற்காகப் பூசிமெழுகிய தரையின் நடுவிலே டுன்டுஷ் மிகுந்த முயற்சிகொண்டு ஓர் அழகிய மரக்கம்பத்தை நட்டு வைத்திருந்தான். வெயில் பட்டு விழும் கம்பத்தின் நிழல் மூலமாக நேரத்தையறியலாம் என்பது டுன்டுஷ் நினைப்பு. பழங்காலத்தில் மக்கள் அவ்வாறே நேரத்தை அளந்து வந்தார்கள். கோபத்துடன் அவனை இழுத்துச் சென்ற உமார், தன் தோளை அந்தக் கம்பத்தின் மீது மோதி, இரண்டு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஒரே மூச்சில் பிடுங்கிக் கீழே சாய்த்தான். அந்தப் பாலைவனத்துப் பறவையின் உள்ளத்திலே கோபத் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.

“இந்தக் கம்பம் காற்றிலே வளைந்து வெயிலில் சுருங்கி உருமாறிப் போய்விடுமே! நாம் என்ன விளையாட்டுப் பிள்ளைகளா? கண்டதையெல்லாம் நம்புவதற்கு? மத விரோதிகளான கிறிஸ்துவர்கள் வைத்திருப்பதைப் போன்ற தூண் இருக்க வேண்டும். ஐந்து ஆள் உயரமுள்ள பளிங்குக்கல் தூண்வேண்டும். அது கை நகத்தைப் போல் சுற்றிலும் சம வளைவுள்ளதாகவும், தேய்த்து மெருகு தீட்டப் பெற்றதாகவும், நீர் மட்டத்தோடு பொருந்தியதாகவும், செப்பினால் நேராகப் பொருத்தப்பட்டும் இருக்கவேண்டும். பருவ மாறுதல்களால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் அந்தப் பளிங்குத் தூண்! அதன் பக்கத்திலே ஒரு நீர்க்கடிகாரமும் இருக்கவேண்டும். கொத்தர்களையும் தச்சர்களையும் என்னிடம் அனுப்பு. எப்படிச் செய்யவேண்டுமென்று நான் அவர்களிடம் விளக்குகிறேன்” என்று கடகடவென்று பேசினான் உமார்.

“மதத் துரோகத்தின் சின்னத்தை நிலைநாட்டுவதுபோல் இது எனக்குத் தோற்றமளிக்கிறது. ஆகவே நிசாம் அவர்களின் ஒப்புதலை முதலில் பெற்றுக் கொள்ளவேண்டுமென்று நினைக்கிறேன்” என்று முணுமுணுத்த குரலில் டுன்டுஷ் கூறினான்.

“நிழலின் மூலமாக ஒரு மயிரிழையளவு காலத்தையும் கணக்கிடுவதற்குரிய ஒரே வழி அதுதான்!”