பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தொழுகை மண்டபத்தில், என் சார்பாக ஒன்பது முறை தொழுகை நடத்தி ஆண்டவன் அருளைப் பெற்றுவா !” என்று அனுமதித்தார் மாலிக்ஷா.

கூடார மடிப்பவனின் மகனாகப் பிறந்த உமார், கடவுளின் அருளால் அரும்பெரும் ஞானம் பெற்றவனாக விளங்கும் உமார், தன் படையெடுப்பு நடைபெறும் பொழுதே இப்படிப்பட்டதொரு புனித யாத்திரையை முடிப்பது மிகப் பொருத்தமானதேயென்று அந்த இளந் துருக்கியரான சுல்தான் மாலிக்ஷா எண்ணினார். ஆனால், உமார் தன்னைவிட்டுப் பிரிந்திருக்கக்கூடிய அந்த இடைக்காலத்திலேயுள்ள ஒவ்வொரு நாளிலும், அதிர்ஷ்டந்தரக் கூடிய நல்ல நாட்களையும், வேண்டாத நாட்களையும், பற்றிய பட்டியல் ஒன்றைக் குறித்து வாங்கிக் கொள்ள அவர் தவறவில்லை. சுல்தானின் ஜாதகத்தில் செவ்வாய் சனி, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சேர்த்துக் காணப்படுவதால், திடீர் சம்பவங்கள் ஏற்படக் கூடுமென்பது ஜாதகப் பலனாகக் காணப்பட்டதால் சுல்தான் இதிலே மிகக் கவனமாக இருந்தார். சுல்தான் தம் வானநூல் கலைஞருக்கு ராஜாங்கக் கொடி பிடிக்கும் ஒரு குழுத்தலைவனையும், காத்தாயானி வகுப்பைச் சேர்ந்த கரிய நிறம்படைத்த குதிரை வீரர்கள் பன்னிருவரையும், பிரயாணத்தின் பாதுகாப்பாளராக நியமித்து அனுப்பினார். உமார் விழித்திருந்தாலும், தூங்கினாலும் அவன் மேல் கண் வைத்தபடி எப்பொழுதும் இரண்டு வீரர்கள் இருந்தபடி இருக்கவேண்டும் என்று அந்தக் குழுத் தலைவனுக்கு ஆணையிட்டார். அதன்படியே, உமார் எங்கு சென்றாலும், வாய்பேசாது இருவீரர்கள் எப்பொழுதும், தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். உமாரைக் கண்காணிக்காமல் தன்பார்வையிலிருந்து தப்பிச் செல்லும்படி எவன் விடுகிறானோ அவன் தலை தரையில் உருள்வது உறுதி என்று அவ்வீரர்களுக்குக் குழுத் தலைவன் எச்சரிக்கை கொடுத்திருந்தான்.

உமார் அவர்களை, எதிர்பாராத எந்தெந்தப் பாதைகளிலோ இழுத்துக் கொண்டு சுற்றினான். டமாஸ்கஸ் பட்டணத்துச் சந்தை கூடுமிடங்களிலும், பைன் மரக்காடுகள் நிறைந்த லெபனானிலும், பனிமலைச் சிகரத்தை யுடைய ஹெர்மான் மலைப் பிரதேசத்திலும் கடற்கரை வெளிகளிலும் அவர்களை