பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151

பின்னே யாரோ வந்து நிற்பது போல் காலடிச் சத்தம் கேட்டதும், அவ்வளவு நேரமும், இவர்கள் பேச்சைக் கவனியாமலே அரைத் தூக்கத்தில் உட்கார்ந்திருந்த காத்தயானியக் காவல் வீரர்களிலே ஒருவன் வந்து நின்று, “நேரமாகிவிட்டது, கூடாரத்திற்குத் திரும்ப வேண்டும்” என்று உமாரை அழைத்தான்.

தன் கூடாரத்திலே உணவு உண்டு ஓய்ந்திருந்த அந்த வேளையிலும், உமாரின் நினைவிலே ஆலிவ் முடியில் உடகார்ந்து கொண்டிருக்கையிலே கண்ட அந்த அந்திவானத்தின் அழகு நின்று கொண்டிருந்தது. அந்த அழகுக் காட்சியை மனத்திரையிலே கண்டு கண்டு ஆனந்தங் கொண்டிருக்கும் அந்த வேளையிலே, அக்ரோனோஸ் என்ற அந்த ஆள் வந்தான். அவன் கூட வந்த ஒரு பையன் தான் தூக்கி வந்த ஒரு வெள்ளைப் பட்டுத் துணி முட்டையை உமாரின் காலடியில் வைத்து விட்டுப்போனான்.

“என்ன இது?” என்று கேட்பது போல் உமார் அவனை நோக்கினான்.

“நம்முடைய சந்திப்பின் அடையாளமாக இந்தச் சிறிய பரிசைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். தங்களுக்கு இந்த வியாபாரியின் உதவி தேவைப்படும் போது...காத்திருக்கிறேன்!” என்று குழைந்தான்.

“ஹாஸானைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று உமார் கேட்டான்.

அக்ரோனோஸ், நரைத்த தன் தாடியைத் தடவிக் கொண்டே, “அவன் பைத்தியம் போல் உளறலாம்; ஆனால், நான் சந்தித்த பல மனிதர்களிலே, மற்றவர்கள் யாரையும் காட்டிலும், பல விஷயங்கள் தெரிந்தவனாக இருக்கிறான் ஹாஸான்! அவனுடைய இந்தச் செய்தியை நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். அது இருக்கட்டும். ஒட்டக விடுதிகளிலே எனக்கொரு செய்தி கிடைத்தது. தாங்கள் எதோ ஒரு செய்தியை எதிர்பார்ப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்றான்.

“ஆம்”

“மீஷித் நகரத்துத் துணி வியாபாரி அப்துல் சையித் என்பவன், நிசாப்பூரிலே, வேறொரு மனைவியைத் தேடிக்