பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178


“சாந்தி! உனக்கு சாந்தியுண்டாக்கும்!” என்று ஜபாரக் முணுமுணுத்தான்.

ஒட்டகச்சாரி, பாலைவனத்து மணல் வெளியைவிட்டுக் கூர்டிய மலைப் பள்ளத்தாக்கின் சிவந்த மண் பூமி வழியாகப் போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் பிற்பகலில், அந்த வியாபாரிகள் கூட்டம், ஓரிடத்திலே நின்றது. அந்த இடத்தில், மனிதனின் இடையளவு உயரமுள்ள கற்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. சில கற்களின் தோற்றம் மனிதனின் முகத்தைப்போன்ற அமைப்புடன் விளங்கியது. அந்த வியாபாரிகள் கீழே இறங்கி அந்தக் கற்களை நோக்கிச் சென்றார்கள். தள்ளியும் உருட்டியும் பாதையிலே சிறிது தூரத்திற்கு அவற்றைத் தள்ளிக் கொண்டு போனார்கள்.

“மலைகளிலிருந்து உருட்டிக் கொண்டுவரப்பட்ட இந்தக் கற்களுக்குப் பயணக் கற்கள் என்று பெயர். அந்தப் பாதை வழியாக வருகின்ற வியாபாரிகள், பிரயாணிகள் அனைவரும், தங்கள் தங்களால் முடிந்த அளவு, அந்தக் கற்களை மெக்காவை நோக்கிச் செல்லும் பாதையில் தள்ளி விடுவார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் அந்தப் பயணக் கற்கள் புனித நகரமான மெக்காவை அடைவதற்கு உதவிசெய்யக் கடமைப்பட்டிருக்கிறான். நான் சிறுவனாக இருந்தபோது இந்தக் கற்கள் ஷிரின் கோட்டை அங்காடித் தெருவில் காணப்பட்டன. இப்பொழுது, கூர்டியர் மலைக்கணவாய்ப் பாதையில் கிடக்கின்றன. இவை மெக்கா போய்ச்சேர இன்னும் எத்தனை காலம் ஆகுமோ?” என்று ஜபாரக் அந்தப் பயணக் கற்களின் கதையைக் கூறினான்.

அவை, மற்ற கற்களைப்போல் சாதாரணமாகத் தோன்றின. இருப்பினும், அவை நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு, இப்படிப் பாதைகளிலேயே சென்று கொண்டிருப்பதும் நின்றுகொண்டிருப்பதும் விந்தைதான்! வியாபாரிகள் அன்று மாலை மிக நீண்ட நேரத்திற்கு, தங்கள் வேண்டுகோள்களையெல்லாம் உரக்கச் சொல்லித் தொழுகை நடத்தினார்கள். ஏற்கெனவே அந்தப் பாதையில் சென்று பழக்கப்பட்ட பழைய வியாபாரிகள் அன்று இரவு எந்தவிதமான துன்பமும் ஏற்படாதிருக்க பிரார்த்தனையும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொண்டார்கள். ஏனெனில், மலையில் உள்ள