பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

ஒருவனும் இருந்தார்கள். விஞ்ஞான மேதைகளின் இடையிலே ஒரு முழு முடனான விகடனைக் கொண்டுவந்து வைத்திருப்பதன் மூலம், உமார், தன் மதிப்பை இழக்கின்றான் என்று மைமன் நினைத்தான்.

அருவருப்பான குரலில், மைமன் தன்னுடைய அறிக்கையை உமாரின் முன் வைத்தான். அந்த அறிக்கையிலே, ஓராண்டின், மணிக்கணக்கும், கதிரவன் நேரத்தின் கணக்கும் இருந்தன.

பூமத்திய ரேகைச் சூரியோதயக் கணக்கு, ஏற்கெனவே நிலைநிறுத்தப்பெற்ற காலக்கணக்கிற்கு, மூன்று மணி ஒன்பது நிமிடம் வேற்றுமைப்படுகிறது” என்று மைமன் தன் கணக்கின் முடிவைத் தெரிவித்தான்.

“என்ன, ஒருமுறை பூமத்திய ரேகையிலிருந்து புறப்பட்டு, மறுபடி சூரியன் அங்கு வந்து சேர்வதற்கு, மூன்று மணி ஒன்பது நிமிடம் தாமதமாக வருகிறதா?” என்று உமார் விளக்கமாகக் கேட்டான்.

“ஆம்” என்று உறுதியான குரலில் மைமன் கூறினான். உமார் இல்லாத போது சூரியோதயக்கணக்கை தான் மிக அக்கறையாகவும் ஆழ்ந்தும் கவனித்திருப்பதைச் சொல்லிக் கொள்வதில் அவனுக்குப் பெருமையாக் இருந்தது. உமார் இல்லாதபோது தானே செய்ததால், பெருமை தனக்கேயுரியது என்று நினைத்துப் பூரித்தான்.

“இருக்க முடியாது. உன்னுடையூ_நீர்க் கடிகாரம்தான் தவறானது. அதை உடைத்து எறிந்துவிடு” என்றான் உமார்.

அதற்குள்ளே, இஸ்பிகாரி என்ற இன்னொரு பேராசிரியன், “தலைவரே! நீர்க்கடிகாரத்திலே அப்படி ஒன்றும் தவறு இல்லை. அதற்கும் சூரியோதயத்திற்கும் ஏறக்குறையப் பதினேழு நிமிடங்கள்தான் வேற்றுமையிருக்கிறது, அது அப்படி ஒன்றும் பெரிய வேற்றுமையல்ல!” என்றான்.

“அட கடவுளே! அவ்வளவு சரியாக வேலை செய்கிறதா அந்தக் கடிகாரம்? அப்படிச் சரியாக இருந்து ஆண்டொன்றில் மணி பதினெட்டு நிமிடங்கள் கணக்கு வித்தியாசப்படுகிறதா?” என்று கேட்டான். “அதற்கு நாங்கள் என்ன செய்வோம் நம்முடைய் விதி” என்று இழுத்தான் அவன்.