பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

வேலைக்குப் பயன்படுத்தினோம். காயாவின் ஆணையாக நான் செய்துவைத்த குறிப்புகள் என் கையாலேயே தவறு இல்லாமல் குறிக்கப்பட்டவை என்று உறுதியாக நான் கூற முடியும்”.

“அறிஞர் டோலமி அவர்களின் நட்சத்திர அட்டவணையின் உதவியைக் கொண்டுதானே இதைக் கணக்குச்செய்து எழுதினாய்?”

“ஆம்!”

“டோலமி அவர்கள் தன் ஆராய்ச்சியை அலெக்சாண்டிரியா நகரத்தில் இருந்து செய்தார். நீ இப்பொழுது நிசாப்பூரிலிருந்து செய்கிறாய். இரண்டும் வேறு வேறு பூரேகைகளில் உள்ள இடங்கள். அவற்றின் கால வித்தியாசத்தைக் கணக்கில் சேர்த்துக்கொண்டாயா?

“அப்படியேதான் செய்தேன். இதோ கடந்தமாதத்தின் நட்சத்திர அட்டவணை. தாங்களே இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.”

பேனாவை எடுத்து உமார் ஒரு சிறு கணக்குப் போட்டுப்பார்த்தான். நட்சத்திர அட்டவணையில் ஒரு குறிப்பை எடுத்துக்கொண்டு, அதிலிருந்த இட வித்தியாசத்தைக் கணக்குச்செய்து, மைமன் தயாரித்திருந்த குறிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தான். கணக்குச் சரியாகவே இருந்தது. உமார் ஒன்றும் புரியாமல் முகத்தைச் சுளித்துக்கொண்டான். என்னடா இது! கணக்கில் தவறில்லை. நட்சத்திரங்களின் நிலையில் வேற்றுமையில்லை. கடிகாரமும் தவறானதல்ல. இருந்தும் ஆறு மணிநேரம் வித்தியாசம் என்றால் ஒன்றும் புரியவில்லையே! உனக்கு ஏதாவது படுகிறதா?” என்று மைமனைக் கேட்டான்.

“எனக்கும் அதுதானே விளங்கவில்லை”

“டோலமியின் நட்சத்திர அட்டவணையைக் கொண்டு வா!” என்று கேட்டுப் பெற்று, அதை மேசைமேல் விரித்து வைத்துக் கொண்டான். மைமன் குறிப்புகளின் முதல் காகிதத்தையும் எடுத்துக் கொண்டான். குனிந்த தலையுடன். தன் வேலையைத் தொடங்கினான். விளக்கு எரிந்து கொண்டிருக்க, நேரங்கடந்து கொண்டிருந்தது. அக்ரோனோஸ் தன் படுக்கையில் போய் சாய்ந்தான். குறட்டை விடத்தொடங்கி விட்டான். ஜபாரக் ஒரு