பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

அவன் பிரச்சினையின் உண்மையைப் புரிந்து கொண்டான். ஒன்பது நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த உண்மையை இப்படி ஆராய்ந்து கண்டு பிடிப்பதென்றால், உமாருக்கு ஏதோ விசேஷ சக்தியிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.

“உமாரிடம் ஓர் அபூர்வ ஆற்றல் இருக்கிறதென்று நிசாம் முன்பே சொல்லியிருக்கிறாரே!” அப்படித்தான் இருக்க வேண்டும், இருப்பினும், யார் இந்த அட்டவணையைத் தயாரித்தவர் என்பதும் எந்த ஊரில் என்பதும் நமக்குத் தெரியவில்லையே! இதைத் தயாரித்தவன் பாபிலோனைச் சேர்ந்த ஒரு சாலடியவனாகவோ, இந்திய நாட்டைச் சேர்ந்த ஒரு ஹிந்துவாகவோ, மேலை நாட்டைச் சேர்ந்த ஒரு கிரேக்கனாகவோ இருக்கலாம். யாருக்குத் தெரியும்?” என்று பெருமூச்சு விட்டான் மைமன்.

எந்த இடத்திலிருந்து ஆராய்ச்சி செய்து இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டது என்பது தெரியும் வரை அதைப் பயன்படுத்துவது முடியாத செயல். அதைக் கொண்டு மேற்கொண்டு ஆராய்ச்சி செய்வது கடினம். அறிஞர் டோலமிக்கு அதன் மர்மம் தெரிந்திருந்தது.

ஆனால், முதலில் கண்டு பிடித்த ஆராய்ச்சியாளனின் பெயரையும் ஊரையும் மர்மமாகவே விட்டு விட்டுச் செத்து விட்டார் டோலமி.

“இன்னும் சில நாட்களில், ஆராய்ச்சி செய்த இடத்தை இந்த அட்டவணை தயாரிக்கப்பட்ட இடத்தை - நான் கண்டு பிடித்துச் சொல்கிறேன். இப்பொழுது நான் தூங்க வேண்டும்” என்று சொல்லி விட்டு உமார் தன் அறைக்குச் சென்றான்.

ஒரு முறை அதிசயச் செயல் புரிந்தவன் மறுபடியும் செய்வானென்று எதிர்பார்க்கலாம். ஆனால், கணித விஷயத்தில் இப்படி ஓர் ஆபூர்வக் கண்டுபிடிப்பை மைமன் இது வரை பார்த்ததுமில்லை. கேள்விப் பட்டதுமில்லை.

மைமனுடன் கூட வேலை செய்த மற்றவர்கள் அனைவரும், காலைத் தொழுகையை முடித்து விட்டு, உமாருடன் பேசிக் கொண்டிருக்கும் மைமனுடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெருமித உணர்ச்சியுடனும், நிமிர்ந்த