பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226


நீல ஓடுகள் வேய்ந்த அந்த அரண்மனையில், அயீஷாவுக்கு என்று தனியாக ஓர் அறை கொடுக்கப்பட்டது. அந்த அறையில் இருந்தபடி உப்பரிகைக்குப் போவதற்கும் வழியிருந்தது. அயீஷா அங்கு வந்ததற்கப்புறம் தனிப் பறவையான தன்னிடம் தன்னை விலைக்கு வாங்கிய நாள் முதல் இன்று வரை தன்னுடன் ஒருநாள் கூட இன்பம் அனுபவிக்க வரவில்லையே என்று வியப்பாயிருந்தது!

அதன் காரணமும் அவளுக்குப் புரியவில்லை ஆனால், பிறகு, பரம்பரை வழக்கப்படி ஒரு மாதம் கடந்த பிறகு, அவன் தன்னை அணுகலாமென்று எண்ணி மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டாள். அந்தக் காலத்தில் அந்தப் பகுதியில் ஒரு அடிமைப் பெண்ணைக் கூடுவதற்குச் சில மதச் சடங்குகள் செய்து ஒரு மாதத்திற்குப் பிறகே கூடுவது வழக்கமாயிருந்தது.

ஆனால், படைவீரர்கள் தங்களிடம் பிடிபடும் பெண்களை அவ்வப்பொழுதே அனுபவித்துப் போரினால் எற்பட்ட இரத்தக் கொதிப்பைத் தணித்துக் கொள்வதும் உண்டு. ஒரு மாதம் வரையில் அவர்களால் காதல் வேகம் தாங்கமுடியாது! வைதிக நம்பிக்கையுடையவர்கள் மட்டும் ஒரு மாதம் சென்ற பிறகே அந்தப் பெண்களோடு சேருவார்கள். உமாரும் அதற்காகத்தான் தன்னிடம் நெருங்கவில்லை என்று அயீஷா எண்ணிக் கொண்டாள்.

முதன் முதலிலே, அரண்மனை முழுதும் சுற்றிப்பார்த்த அயீஷா, அங்கு தன்னைப்போல் வேறு பெண்கள் யாருமே இல்லை என்று தெரிந்து கொண்டு சந்தோஷப்பட்டாள். சுலெய்க்கா என்ற சமையல்காரியை விசாரித்தபொழுது அவள் “தலைவருக்கு வேறு மனைவிகள் யாருமே கிடையாது” என்று சொன்னாள்.

மேலும் “அவர் ஏற்கெனவே திருமணம் செய்து ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வரும்பொழுது, அவள் வழியிலேயே கொள்ளை நோயால் இறந்து போய்விட்டாள்” என்றும், “சில சமயங்களில் ஆட்டக்காரிகளான பொது மகளிர் சிலரைக் கூட்டிக் கொண்டு வருவார். பிறகு பிடிக்காமல் சிறிது நேரத்திலேயே ஏதாவது பொருள் கொடுத்து வெளியில் விரட்டி