பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

227


விடுவார்!” என்றும் சில சில விவரங்கள் கொடுத்தாள்.

தன்னைப் பொருள் கொடுத்தோ, கொடுக்காமலோ விரட்டிவிடக்கூடாதென்று அயீஷா மனதிற்குள்ளேயே ஆண்டவனைப் பிரார்த்தித்தாள். உண்மையில் அவர் தன்மீது கருணை வைத்தே தன்னை விலைக்கு வாங்கினாராகையால் அந்த ஆடல் மங்கையரின் கதி தனக்கு வராதென்று மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டாள். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அரண்மனையை அவளுக்கு மிக மிகப் பிடித்திருந்தது.

உண்மையில் உமார் தன் பழைய காதலியின் நினைவின் ஏக்கப் பிரமையிலேயே அன்போடு வாங்கியிருப்பதை அவள் எப்படி அறிவாள்?

அயீஷாவுக்கு அந்த அரண்மனை மிகவும் பிடித்துவிட்டது. உமாரையும் அவளுக்குப் பிடித்து விட்டதால், அந்த அரண்மனையும் அவளுக்குப் பிடித்துவிட்டது.

அந்த அரண்மனைப் புறத்தில் இருந்த தோட்டத்தில், குளிர்ந்த நிழல் மரங்களின் ஊடே வளைந்து வளைந்து ஓர் ஒடை சென்று கொண்டிருந்தது. அந்த ஓடை, சற்றுத் தூரத்தில் இருந்த சிறு குட்டையில் போய் விழுந்தது. எங்கும் வெள்ளை ரோஜாக் கொடிகள் எழும்பிப் படர்ந்திருந்தன. சுவர்களின் மேல் கூட அவை சுற்றிப் படர்ந்திருந்தன.

தோட்டத்தின் ஒரு மூலையிலே, வனதேவதையின் வஸந்த விஹாரம் போல் ஒரு சிறு கட்டிடம் இருந்தது. ஆயீஷா அங்கே சென்று, பட்டு மெத்தை தைத்த நாற்காலிகளிலே உட்கார்ந்தும், உல்லாசமாக ராணிபோல சாய்ந்து கொண்டும், மனசுக்குப் பிடித்த இனிப்புப் பலகாரங்களைத் தின்றுகொண்டும், வேடிக்கையாக நீருற்றின் நீர்ச் சிதறல்களைக் கவனித்துக் கொண்டும், ஆசைப் பெருமூச்சோடு தன் நகங்களுக்கு மருதோன்றிச்சாயம் பூசிக்கொண்டும் தன்னுடைய பொழுதைக் கழித்து வந்தாள். தான் என்றென்றும் காசர் குச்சிக் அரண்மனையிலேயே இன்பமாக இருக்கலாம் என்றுதான் ஆயீஷா எண்ணிக் கொள்வாள்.

“இந்த அரண்மனை அவருக்குச் சொந்தமான எத்தனையோ அரண்மனைகளில் ஒன்று. நம் தலைவருக்கு, நிசாப்பூரிலேயும்,