பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232


அவசியம் வரவேண்டியதாயிருந்தாலும் சொந்தக்காரியாகவோ உரிமையும் திருமண உறவும் உள்ள பெண்ணாகவோ இருந்தால் தவறில்லை. அயீஷா பாவம், விலைக்கு வாங்கப்பட்ட அடிமைதானே!

கலெய்க்கா மூலம் செய்தியனுப்பித் தன்னைப்பற்றித் தெரிவித்துக் கொள்ளவும் தைரியம் உண்டாகவில்லை. அவர் குதிரையின்மீது வரும் பொழுது உப்பரிகை மேலே நின்று கொண்டிருந்த தன்னைப் பார்த்திருக்கத்தான் வேண்டும். அப்படிப் பார்த்திருந்தாலும் இவ்வளவு நாட்கள் தன்னைப்பற்றி ஏன் ஒன்றும் விசாரித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை, ஏன் வாங்கினோம் என்று இவளை எண்ணிவிட்டாரோ? மறுபடியும் திருப்பி யாரிடமாவது விற்றுவிட முடிவுசெய்து விட்டாரோ? இப்படி நினைத்துப் பார்க்கிறபொழுது ஆயீஷாவின் நெஞ்செல்லாம் குமுறியது! தன் தலைவிதி எப்படியெப்படி மாறுமோ? யாராரிடம் எல்லாம் மாறிமாறி அடிமையாகச்செல்ல நேரிடுமோ என்று எண்ணுவாள். அப்பொழுது, ஏன் பிறந்தேன் என்று கூட நினைப்பாள். கூண்டுக் கிளிபோன்ற அந்தப்பெண்ணழகி, குளிக்கும்பொழுதும் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் போதும், நகத்துக்கு சாயம் பூசும் பொழுதும், தனக்குள்ளே ஆயிரமாயிரம் எண்ணிப் புழுங்குவாள்.

உமாரைப் பார்க்கும்பொழுது அவளுக்கு ஏனோ ஒரு வித பயம் உண்டாகியது. அவனுடைய உயர்ந்த நிலையும், அதிகாரத்தின் பெருமையும், அலட்சியப் போக்கும் இதெல்லாம் சேர்ந்து அவளைப் பயமுறுத்தியதோ என்னவோ? என்னதான் நடுக்கம் ஏற்பட்டாலும், மீண்டும் விற்கப்படுவதை அவள் விரும்பவில்லை. தான் முக்காடில்லாமல் இருக்கும்பொழுது, உமார் மட்டும் அவளுக்கு நேருக்கு நேர் எதிரே வரக்கூடிய நிலைமை ஏற்பட்டால். ஒரு நிமிடநேரம் கிடைத்தாலும் போதும், அவன் தன்னைக் கழித்துக்கட்ட நினைக்க முடியாதபடி செய்துவிட முடியும் என்று மனத்தை தேற்றிக்கொள்வாள். தன்னுடைய அழகிலே அவ்வளவு நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

தோட்டத்தில் உட்கார்ந்து, விருந்தாளிகளும் மற்றவர்களும் பேசிக்கொள்ளுவதையும் இரவு விளக்கேற்றிய பிறகு கூடத்திலே