பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236


“ஆண்டவனால் பழிக்கப்பட்ட இந்தக் காரியத்தைச் செய்யாதீர்கள்” என்று அந்த இந்து தடுத்தான்.

உமார் அந்த ஒரு குவளை மதுவையும் குடித்து விட்டுத்தான் கீழே வைத்தான். உமார் சிரித்துக்கொண்டே, “நண்பா, மதுவைப் பழிக்காதே! அது ஒன்றுதான் எனக்கு உயிர்; அதுவே எனக்கு நலங்கொடுப்பது” என்றான் உத்வேகத்தோடு.

ஏற்கெனவே, உமார், இந்தக் காசாலி என்ற இந்துவுடன் இப்படி உயிராய்ப் பழகுகிறானே. நம்மைக் கவனிக்காமல் என்று அயீஷா அந்த இந்தியன் மீது பொறாமை கொண்டிருந்தாள். இப்போது உமார், “மதுவே என் உயிர்” என்கிறான். இனி அடுத்து என்ன வருமோ? தனக்குப் போட்டியாக என்று வியப்படைந்தாள்.

காசாலி அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து மதங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினான். ஏராளமானவை அவற்றில் இருந்தாலும், கடவுள் ஒருவரே! உலகனைத்தையும் உண்டாக்கிக் காத்து அழித்து நடத்தி வரும் இறைவன் ஒருவனே, என்ற கருத்தை வலியுறுத்தியே காசாலி பேசினான்.

“இஸ்லாத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். எத்தனை விதமான பிரிவுகள். மத நம்பிக்கையுடைய வைதிகமுஸ்லிம்கள் ஒரு புறம் வைதிகத்தை எதிர்த்துப் போராடுகின்ற அலி என்று சொல்லப் படுகின்ற வேதாந்திகள் ஒரு புறம்; அல் என்பவருடைய மதவாதத்தைப் பின்பற்றுகின்ற அலியாக்கள் ஒரு புறம்; இவர்களெல்லாம் போக ஏழாவது மாதி என்ற ஒரு தேவதூதர் வருவார் என்று எதிர்பார்க்கின்றவர்கள் வேறு இருக்கிறார்கள். எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், வேறு வேறு பாதையிலே செல்லுகிறார்கள். இந்துக்களிலே ஒரு கதையுண்டு. ஓரிடத்திலே இருட்டறையிலே யானையைக் கட்டி வைத்திருந்தார்கள். அந்த ஊர் மக்களெல்லாம் இருட்டறையில் கட்டி வைக்கப் பட்டிருந்த அந்த யானையைப் பார்க்க வந்தார்கள். அதைத் தடவித் தடவித்தான் பார்க்க முடிந்தது. துதிக்கையைத் தொட்டுப் பார்த்து விட்டு ஒருவன், இது தண்ணிர்க் குழாய் என்றான். இனனொருவன் காது ஒன்றைத் தடவிப் பார்த்துவிட்டு யானை என்றால் விசிறிதான் என்றான். மூன்றாவது ஆள் காலைத் தடவி விட்டுத்