பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

259

நகரங்களிலே தங்குமானால், மக்கள் அவர்களால் துன்புறும்படி நேரிடும். மேலும், போர்க்களத்திலே பயன்பட்ட முரட்டு வீரம், நாட்டுப்புறத்து மக்களைத் துன்புறுத்தத் தொடங்கிவிடும்.

இந்தப் பட்டாளம் என்பது என்ன? வடக்கில் உள்ள துருக்கியர்களும், போருக்காகவே அடிமைகளாக வளர்க்கப்பட்ட துருக்கியருக்குப் பிறந்த கெளலாமியர்களும் ஜார்ஜியர்களும், துருக்கோமியரும், காட்டுமிராண்டி அரபியரும் ஆகியோர் அடங்கிய கூட்டமே நம்முடைய சேனைப்பட்டாளம். இதிலே கொரசானியர் சிலரும், மிகக் குறைந்த அளவு பாரசீகர்க அல்லது பாக்தாது அராபியர்கள் கலந்திருக்கிறார்கள். போர் நிறுத்தம் ஏற்பட்டு, இந்தச் சேனைகளெல்லாம் வந்து வேலையில்லாமல் நம்மிடையே தங்கநேரிட்டால் வெறிபிடித்த அவர்களால் சும்மாயிருக்க முடியாது. உள்நாட்டுக் குழப்பம் உண்டாகி, நாடு பாழடைந்துவிடும். ஆகவேதான் அவர்களை எப்பொழுதும் போரிலேயே ஈடுபடுத்தி வைக்க வேண்டும். கீழ்த் திசையில் போர் முடிவுபெற்று விடுமானால், மேற்றிசையில் தொடங்கவேண்டும். அல்லா அருள்புரிந்தால் மேற்கேயுள்ள இரண்டு அருமையான பரிசுகள் நடிக்குக் கிடைக்கும். அந்தக் கான்ஸ்டாண்டி நோபிலும், எகிப்தும் ஆகிய இரு தேசங்களும் நம் வசமாகிவிட்டால் எவ்வளவு பெருமையாக இருக்கும்?

நிசாமின் கூர்மையான அறிவினால் தீட்டப்பெற்ற இந்தத் திட்டம் உமாரைத் திடுக்கிட வைத்தது. இஸ்லாத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்த காலிப்பின் நாட்டையும், சீசர்களின் கடைசிப் பாதுகாப்புக் கோட்டையாக விளங்கும் ஓரிடத்தையும் வளைத்துக் கொள்ள ஒரு புனிதப்போர். இதே புனிதப் போரினால், தன் கண் முன்னே ஜெருசலம் வீழ்த்தப் பட்டதை உமார் பார்த்திருக்கிறான். காய்ந்து போன தோலுடன் கூடிய உருவம்போலத் தளர்ந்து காணப்பட்ட நிசாம், வெல்லப்பட முடியாத அதிகாரத்தின் ரசவாதியாக மனிதர்களின் விதிகளையெல்லாம் அடக்கியாளும் மாயவித்தைக்காரராகத் தோற்றமளித்தார். இந்தத் தோற்றம் சற்று நேரமே இருந்தது. பிறகு மாறிவிட்டது. ஒவ்வொரு படையெடுப்பிலும் ஏற்படக்கூடிய உயிரிழப்பையும், பொருள் இழப்பையும் ஈடுகட்டுவதற்கு மறுபடியும் ஒரு படையெடுப்பு நடத்தித் தீரவேண்டும். வெற்றியைத் தேடித்தரும் அமைப்பான செல்ஜுக் சேனைக்கு