பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268


“அந்த நாய்!” என்று உமார் கத்தினான்.

“மெதுவாகப் பேசுங்கள்! அந்த நாய் நிசாமின் நாய் தாங்கள் நிசாமின் ஆதரவை இழந்து விட்டீர்கள்” என்று அக்ரோனோஸ் எச்சரித்தான்.

“நாங்கள் சச்சரவிட்டுக் கொண்டால் என்ன? நான் அவருடைய பகைவன் அல்ல. நான் இந்த நாய்க்குப் பயப்பட வேண்டியதில்லை.”

“ஆனால், நான் இந்தக் கும்பலுக்குப் பயப்பட வேண்டியருக்கிறதே! இப்படியொரு கும்பல் முல்லாக்களால் தூண்டிவிடப்பட்டு, இரத்த வெறி பிடித்துத் திரிவதை நீங்கள் இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா?”

கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்களின் முதுகுப்புறமாகக் குனிந்தபடி, உமாரை இழுத்துக் கொண்டு சென்ற அக்ரோனோஸ் ஒரு கம்பளி வியாபாரியின் கடைக்குள்ளே நுழைந்தான்.

அந்த வியாபாரி, வெளியில் நடக்கும் குழப்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அங்கிருந்த ஒரு முட்டையைச் சுட்டிக் காட்டிய அக்ரோனோஸ், “ஹபி, எங்களுக்கு ஏழு வேண்டும்” என்றான்.

எவ்விதமான பதிலும் பேசாமல் கடைக்காரன் அவர்களைப் பின்புறத்திற்கு அழைத்துச் சென்றான்.

ஒரு குறுகிய கதவை மறைத்துக் கொண்டிருந்த ஒரு திரையை இழுத்து, “ஏழு பொருளுக்குரியவர்கள் இந்த நேரத்தில் மதுவருந்தி மகிழ்ந்திருப்பார்கள்” என்று சொன்னான். அவர்கள் உள்ளே நுழைந்ததும் மறுபடி அந்தத் திரையையிழுத்து மறைத்து விட்டான்.

“என் இடுப்பைப் பிடித்துக் கொண்டு இறங்குங்கள். வளைந்து செல்லக்கூடிய படிகள் கிட்டத்தட்ட இருபது இருக்கின்றன” என்று கூறிக்கொண்டு அக்ரோனோஸ் கீழே இறங்கினான். இருளிலே, உமாரும் அவன் பின்னே இறங்கிச் சென்றான். சிறிது தூரம் இறங்கிய பின், அந்த படிகள் வளையும் ஓரிடத்திலே, வெளிச்சம் தெரிந்தது. சுவர் மாடக்குழி ஒன்றிலே ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அக்ரோனோஸ்