பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

அவனுடைய வாய் அகன்று கண்கள் தன்னைச் சுற்றியிருந்தவர்களின் ஊடே பார்த்துக் கொண்டிருந்தது.

“நான்தான்!” என்று கூறிக் கொண்டே, அந்த இளைஞனை அப்பால் தள்ள முயற்சித்தான் ரக்கின் உட்டின். ஆனால் அவனால் முடியவில்லை. “அவன் நம் மலையைச் சேர்ந்தவன் அல்ல. இதோ பாருங்கள்; அவன் தாடியிலே சாயம், கைகளிலே வெள்ளைத் தோல். நம் தலைவரின் தொண்டர்களே, நம்மிடையிலே, இந்த மனிதன் வேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறான்” என்று அந்த இளைஞன் மீண்டும் கூவினான், பயங்கரமாக.

உறுமும் முகங்கள் உமாரை நோக்கி நெருங்கின. குமுறும் இதயங்கள், கொதிக்கும் கண்கள் அவனை நோக்கிப் பாய்ந்து வந்தன. அவர்களுடைய கத்தியின் இரத்த நாற்றமும், வியர்வை நாற்றமும் அவன் மூக்கைத் துளைத்தன. உமாரின் மூளையிலே திடீரென்று ஒரு கதகதப்பு உணர்ச்சி பெருகியது. அந்தக் குகையின் பக்கங்கள் அகன்று கொண்டு சென்றன, இடைவெளி அதிகமாகியது பூமியின் அடித்தளமான இந்த இடத்திலே தொடக்க காலமுதல் பிரார்த்தனை மேடையில் பணிபுரிந்து வரும் மத குருக்கள் பல பேர் இருப்பதைக் கண்டான். அந்தக் கல் மிருகம் மிகமிகப் பெரியதாக வளர்ந்திருந்தது. அந்தக்கல் இறக்கைகள் ஆடி அசைந்தன. அந்த மிருகத்தின் கால் நகங்களுக்கிடையே அந்த மேடையிருந்தது. அந்தப் பழங்காலத்துத் தெய்வத்தின் மேடையிலே என்றும் அழியாத நெருப்பின் இருப்பிடத்திலே தான் எல்லா உடல்களும் வந்து சேரவேண்டும். அந்தப் பெரிய மிருகத்தின் பேராற்றலை எதிர்த்து, அவன் தன்னுடைய எளிய உடலைக் காப்பாற்றுவதென்று நினைப்பது முட்டாள் தனமானது.

“வழிவிடுங்கள், வழி!” கனமான காலடி ஓசைகள் கேட்டன. அருகில் வந்து கொண்டிருந்தன. அணியணியாகப் பல கரிய நிறமுள்ள அடிமைகள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு, உமாரை நோக்கி வந்தார்கள்! உமாரின் அருகில் நெருங்க முயன்ற கத்தி வீரர்கள் அடிமைகளால் அடித்துத் தள்ளப்பட்டார்கள். பலமான கைகளால் அவன் தூக்கப்பட்டு, அந்த நெருப்பிருக்கும் இடத்தை விட்டு அகற்றிக் கொண்டு போகப்பட்டான். முணுமுணுக்கும் குரல்களின் ஓசை குறைந்து, கரிய