பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

317


உண்மையில், புத்தியுள்ள மிருகங்கள் என்ற நிலையைக் காட்டிலும் மனிதப் பிராணிகள் உயர்ந்தவையல்ல என்ற நிலையிருக்குமானால், ஹாஸ்ானுடைய புது மதத்தை மிக உயர்ந்ததென்று கூறலாம். ஆனால் மனிதர்கள் புத்தியினால் மட்டும் மிருகங்களிலிருந்து வேறுபடவில்லையே, அவர்களுக்கென்று சுதந்திரமான எண்ணங்களும், கொள்கைகளும் இருக்கின்றன. தன் ஒரு குறிக்கோளுக்காகப் பலதரப்பட்ட விஞ்ஞானிகளின் மனத்தையும் அடக்கியாளும் ஒரே தலைவனாக ஹாஸான் இருக்கிறான். அவனுடைய இந்தக் குறிக்கோள் நிறைவேறுவதற்காக மற்றவர்கள் மனசாட்சியை இழந்து வேலைசெய்ய வேண்டியிருக்கிறதே?

உலகத்தின் ஆராய்ச்சிக் கூடங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தது போல் இருக்கும் இந்த இடத்தில், ஸோயி போன்ற ஓர் அழகிந பெண்ணின் துணையுடன் இருப்பது அப்படி ஒன்றும் கெடுதல் அல்ல. மேலும், நிசாம் உடனோ, காசாலியுடனோ, தன்னுடைய மனசாட்சியுடனோ விவாதித்துக் கொண்டு சங்கடப்பட வேண்டியதும் இல்லை. நிம்மதியாகவே இருக்கலாம். ஆனால், எத்தனை செல்வம் கிடைத்தாலும், இன்பம் கிடைத்தாலும், ஹாஸானைப் போன்ற ஒருவனிடம் வேலை செய்வது கூடவே கூடாதென்று உமார் எண்ணினான். ஹாஸானிடம் வேலை செய்தால், அவனுடைய அடிமையாகிவிட வேண்டியதுதான். சுதந்திரமான எண்ணங்களுக்கும், அன்புக்கும் அருளுக்கும் அங்கே இடமில்லை.

அவனிடம் வேலை பார்த்தால், தான் செய்ய வேண்டுமென்று நினைக்கிற ஆராய்ச்சிகளைச் செய்ய முடியாது. வானுலகத்தின் மையத்திலே, பூமி அசையாமல் நிற்கவில்லை என்றும், தன்னைத்தானே சுற்றிக் கொண்டு வான் வெளியின் ஊடாகச் சுற்றி வந்துகொண்டிருக்கிற தென்றும் தான் கொண்ட கருத்தை நிலை நாட்டுவதற்காக உமார், ஆராய்ச்சி நடத்த வேண்டுமென்று அப்பொழுதுதான் எண்ணத் தொடங்கியிருந்தான்.

“எந்த விதத்திலும் ஹாஸான் என்னை விடுவிக்கப் போவதில்லை. இத்தனை இரகசியங்களையும் தெரிந்து கொண்டுவிட்ட நான் இங்கிருக்க முடியாதென்று கூறிவிட்டால் என்னை இங்கேயே சிறைவைத்து விடுவான். இது உறுதி. இந்த