பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

என்று கவனித்துவிட்டு, ரக்கின் உட்டின் அந்தக் கோப்பையைக் காலி செய்தான், கோப்பையைக் கீழே வைத்தான்.

“இன்னும் வேண்டுமா?” என்று கேட்ட உமார் அவன் பதிலுக்குக்கூடக் காத்திராமல் மற்றொரு கோப்பை ஊற்றிக் கொடுத்தான். அவனோ ஊற்ற ஊற்றக் குடித்துக் கொண்டேயிருந்தான். மருந்து வேலை செய்யத் தொடங்கியது பிதற்றத் தொடங்கினான். பிறகு மேலும் மேலும் குடிக்கப் பேச்சும் நின்று மயங்கிய நிலையில் தூங்கத்தொடங்கிவிட்டான் இனி அவன் என்ன கனவு காணுவானோ? உமார் வேலையைத் தொடங்கினான். அவனுடைய உடைகளை எடுத்து அணிந்து கொண்டான் ரக்கின் உட்டினுக்குத் தன் உடைகளைப் போட்டு விட்டான். மெதுவாகக் கதவைத் திறந்து வெளியேறி வந்து மீண்டும் தன் அறைக்கதவைச் சாத்திவிட்டு நடைபாதையில் நடந்தான். தூரத்தில் பேச்சுக்குரல் எங்கோ கேட்டது. நடைபாதையில் யாரும் இல்லை. கோட்டைப்புறத்துக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். தலைவாசலை நோக்கி நடந்தான். கீழேயிருந்த சுண்ணாம்புக்கல் தரையில்பட்டுப் பிரதிபலித்து சூரிய வெளிச்சம் கண்களைக் கூச வைத்தது.

இரண்டு அடிமைகள் சாடியிலே எதையோ தூக்கிக்கொண்டு குறுக்கே சென்றார்கள். தலைவாசலிலே இருந்த காவல் தலைவன் உமாரின் பக்கம் திரும்பிப் பார்த்தான். ஆனால் யாரும் அசையவில்லை. வாசல் இன்னும் நாலடிதுரத்தில் இருந்தது ஒன்று. இரண்டு. மன்று. என்ற எண்ணிக் கொண்டே படபடக்கும் இதயத்தோடு நெருங்கி வந்த உமாரை காவல் தலைவன், “அறிஞரே! இன்றைய அடையாளச் சொல் என்ன?” என்று கேட்டான்.

படைவீரர்களும், இரகசியக் கூட்டத்தினரும், தங்கள் ஆட்களைத் தெரிந்து கொள்வதற்கு அடையாளச்சொல் ஒன்று வைத்துக் கொள்வது வழக்கம். அதைத் தினந்தோறும் வெவ்வேறு சொல்லாக மாற்றுவார்கள். வெளியே செல்வோருக்கும் காவலர்களுக்கும், தலைவர்களுக்கும் மட்டுமே அந்தச் சொல் தெரியும். உமார் இந்த விஷயத்தை யோசித்துப்பார்க்க மறந்துவிட்டான். மூச்சைப் பிடித்துக்கொண்டு மிகுந்த அமைதியான குரலில், “நான் அவசரத்தில் அதை மறந்துவிட்டேன். நினைவுக்கும் வரவில்லை. நம் தலைவரே