பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

333

தாளையெடுத்துக் கொடுத்தார். அதிலே, ‘கூடார மடிப்பவன், தேவ தூதன்போல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறான். சிங்கத்தின் தோலைப் போர்த்துக்கொண்ட நாய் இதுவென்று தெரிந்து கொள்ளவும்’ என்று தெளிவான கையெழுத்தில் எழுதியிருந்தது.

‘உமார், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மாலஸ்கார்ட் போர்க்களத்திலிருந்து நம்முடைய அதிர்ஷ்டம் நம்மை ஒன்று சேர்த்திருக்கிறது. நம்மை யாராலும் பிரித்துவிட முடியாது என்று சுல்தான் உறுதி கூறினார். அவர் தன் பேச்சைத் தொடர்ந்து, இந்தக் கடிதம் அனுப்பியதெல்லாம் உளவாளிகள் இருப்பதால்தான். நிசாம் உளவு பார்க்கும் முறையை வளர்த்துவிட்டார். ஒவ்வொரு அரசாங்க உத்தியோகஸ்தனையும் சுற்றி இந்த உளவாளிகள் திரிகிறார்கள். எனக்கு எதிரியாக உள்ளவர்களும் இந்த உளவாளிகளைக் கைக்கூலி கொடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நம் அரசாங்கத்தில் உளவு பார்க்கும் முறையையே ஒழித்துவிட வேண்டும்’ என்றார்.

‘நான் இங்கே ஒன்றுக்கும் பயனில்லாமல் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. நான் என் விண்மீன் வீட்டிற்குச் செல்கிறேன்’ என்று உமார் கேட்டான்.

‘அங்கே போய் என்ன செய்வாய்?’

‘ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிக்கப் போகிறேன். அது வானவீதியைப் பற்றியது.’

‘ஆ! வானவீதியில் உள்ள ஒரு புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடித்திருப்பாய்! அதனால் என்ன நன்மைகள் வரும்? சீக்கிரம் சொல்!’

‘நட்சத்திரமல்ல, வானவீதியிலே நாமிருக்கும் இந்த உலகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு நகர்ந்து போகிறது என்ற விஷயம்தான்’

சுல்தான் அவனை உற்று நோக்கினார். அவன் தொடர்ந்துகூறிய விளக்கங்கள் அவருடைய புரியும் தன்மைக்கு அப்பாற்பட்டவைகளாக இருந்தன. எதையோ நினைத்துக் கொண்ட அவர். ‘உமார், அன்றொரு நாள் நான் இதுவரை