பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

367


அதை அவன் வாங்கிக் கொண்டு திரும்பினான். அவன் மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டான், ‘இவன்தான் உமாராக இருக்க வேண்டும்.

மாயவித்தையிலும், விதியையறிவதிலும் திறழையுள்ளவன் என்று சொன்னர்ர்களே! கடிதத்தைப் படிக்காமலே பதில் எழுதிக் கொடுத்து விட்டானே!’ ஆச்சரியப்பட்டுக் கொண்டே அவன் போய்விட்டான்.

காலை மலர்ந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல நட்சத்திரங்கள் மறைந்து கொண்டிருந்தன. இந்த மாதிரி நேரத்தைப்பற்றி யாஸ்மி என்ன சொன்னாள்.

‘நட்சத்திரங்கள் மறையும் நேரத்திலே உள்ளத்திலே காதலுடன் தனியாக இருப்பது மிகக் கொடுமையான துன்பம்’ என்றாள்.

யாஸ்மி இப்பொ எப்படி இருப்பாள். கண்ணுக்குத் தெரியாத திசையிலே ஒரு நிழலாக ஒட்டிக் கொண்டு இருப்பாளா? ரஹீம்! ரஹீமுடைய் ரத்தம் மண்ணுக்குள்ளே பாய்ந்து மறைந்துவிட்டது. மறுபடியும் அது ஓடிவரவா போகிறது. ஜபாரக்! மாலிக்ஷா! நிசாம்!

இவர்களைப் பற்றியெல்லாம் நினைக்கக் கூடாது. இவர்களெல்லாம் திரும்பி வரவா போகிறார்கள்? சற்று முன்னாலே,வந்தானே தூதுவன், அவனைப்போல அவர்கள் குதிரைகளிலே ஏறி இந்தக் கொரசான் பாதையிலே வரமுடியுமா?

சிந்தனையை நிறுத்திவிட்டு, உமார் எழுந்து முரசைத் தட்டினான். விடுதியில் இருந்த வியாபாரியும் ஆட்களும் எழுந்தார்கள்.

தங்கள் மிருகங்களின்மேல் முட்டை ஏற்றி ஆயத்தமானார்கள். அவர்களுடைய ஒட்டகச்சாரியின் முன்னே உமார் நடக்கத் தொடங்கினான்.

“ஓய், காவற்காரா! ஒட்டகச் சாரி எங்கே போகிறது? என்று கேட்டான் அந்த வியாபாரி.

“இரவு போன இடத்திற்குப்போகிறது.”

“அந்த இடம் எங்கே இருக்கிறது.”

“எங்கும் இல்லை.”

உமார் நடந்துகொண்டிருந்தான்.

- முற்றும் -