பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

உண்மையாக இருக்காது. நிஜாப்பூருக்கு வெளியே, பல நாட்கள் சுற்றியலைந்துவிட்டுத் தன்னந்தனியாகத் தன்னிடம் வந்து, கணிதப் பேராசிரியரிடம் பாடம் கேட்க ஆவலுடன் வந்திருப்பதாகத் தெரிவித்தான். பார்ப்பதற்கு ஒரு போர் வீரனைப் போலவும், பசியெடுத்து இரைதேடிக் கொண்டிருக்கும் சிங்கத்தைப் போன்ற உடற்கட்டும் கொண்டிருக்கும் இவன் படித்துவிட்டுப் பள்ளியாசிரியனாகவா வரப்போகிறான்? பின் எதற்காக இவன் என்னிடம் பாடம் கற்க வரவேண்டும்? நிச்சயமாக இவன் உளவாளிதான்!” என்று அவனைப்பற்றி ஆசிரியர் அலி தீர்மானித்து வைத்திருந்தார். ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன், கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கினார்.

“கற்றறிந்த மேதையான அபூரயான் பிருனி என்ற நூலாசிரியர் தம்முடைய சோதிடக்கலை நூலின் முதல் அதிகாரத்திலே, நட்சத்திரங்களைப்பற்றிய அறிவு ஒரு விஞ்ஞானம் என்றும், அந்த அறிவிருந்தால், அதன் உதவியால், மனிதர்கள், அரசர்கள், நகரங்கள், அரசியல் இவற்றிலே ஏற்படக்கூடிய மாறுதல்களைப்பற்றி முன்கூட்டியே அறிந்துசொல்ல முடியுமென்றும் கூறியிருக்கிறார். சோதிடநூல் அறியாமலேயே ஒருவன் வானநூலில் தேர்ச்சி பெற்ற அறிவுடையவனாயிருக்கலாம். ஆனால் வானநூல் அறியாதவன் சோதிடம் சொல்லுவதென்பது முடியாத காரியம். ஆகவே நட்சத்திரங்களைப் பற்றிய ஆராய்ச்சி சோதிடக்கலைக்கு முக்கியம்” என்று ஆசிரியர் பதில் கூறியார்.

கேள்விகேட்ட மாணவனுக்கு ஒரு நப்பாசையிருந்தது. தங்கம் செய்யக்கூடிய முறைகள் ஏதாவது தென்படுமா என்று பேராசிரியருடைய புத்தகங்களிலே புரட்டிப்புரட்டி ஆராய்ச்சி செய்து பார்த்தான். ஆனால், அவன் கண்ணுக்கு அது அகப்படவேயில்லை அடுத்தபடியாக அவன் ஒரு கேள்வி கேட்டான்.

“பழையநூல் ஒன்றிலே பொன்னின் தன்மை சூரியனிடம் இருக்கிறதென்று எழுதியிருக்கிறது. சூரியனுடைய சத்து நெருப்பு. நெருப்பின் மூலமாக நாம் பொன்னைப் பெறலாம், நெருப்பின் சத்தை நாம் கண்டுபிடித்துவிட்டால் தங்கம் பெறலாம். நெருப்பின் சத்தை நாம்பெறுவதற்கு... வழி... எதுவும்