பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வியப்புடன் “இது என்ன?” என்றார்.

“கனஅளவின் மூலங்களின் கணக்கு” என்று பதில் சொன்னான் உமார்.

கனஅளவு மூலங்களைப்பற்றிய கஷ்டமான கணக்கொன்றை அவனுக்குக் கொடுத்திருந்தது அவருக்கு நினைவுவந்தது.

“எவ்வளவு தூரம் செய்திருக்கிறாய்?” என்று கேட்டார்.

“முடிந்து விட்டது” என்றான்.

அவரால் நம்ப முடியவில்லை. அந்தக் கணக்கை அவரால் செய்ய முடியவில்லை. கிரேக்கர்கள் அந்த மாதிரியான கணக்கிற்கு விடைகண்டு பிடித்திருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் உமார் அதற்கு விடைகண்டு பிடித்திருக்கிறான் என்பது அவருக்குச் சந்தேகமான விஷயமாகயிருந்தது, ஆகவே, வகுப்பைக் கலைத்துவிட்டு, உமாரைத் தம்முடன் தனிஅறைக்கு அழைத்துச்சென்று அந்தத்தாளில் உள்ள விஷயங்களை ஆராய்ந்தார்.

“இந்த விஷயம் என்னால் புரிந்துகொள்ள இயலாததாயிருக்கிறது. கனஅளவைச் சிறுசிறு கோள அளவுகளாகப் பிரித்திருக்கிறாய் அல்லவா? கிரேக்கர்களின் விடையை நீயும் தெரிந்து கொண்டிருக்கிறாய்!” என்றார் அலி.

“அவர்கள் எப்படி இதன் விடையைக் கணக்கிட்டார்கள்? என்று உமார் கேட்டான்.

“இதுவரை நான் அதை அறிந்து கொள்ளவில்லை”

உமாருக்குக் கணக்குக் கொடுக்கும் போது, அதன் விடையைச் சொல்லவில்லை என்பது பேராசிரியருக்கு நினைவு இருந்தது. அவருடைய குறிப்புத் தாள்களுக்கிடையே, அந்தக் கணக்கைப்பற்றிய குறிப்பும் விடையும் வைத்திருந்தார். அவருடைய ஆசனத்தின் அருகிலே இருந்த திருக்குர்ஆன் புத்தகத்துக்குள்ளே அந்தக் குறிப்பைத் திணித்து வைத்திருந்தார். அவருடைய அறையைத் தவிர்த்து அந்தப் புத்தகத்தை அவர் வெளியில் எடுத்து வருவது கிடையாது. தம் மாணவர்களையும் அறைக்குள் தாம் இல்லாதபோது வரக்கூடாதென்று கட்டுப்படுத்தி வைத்திருந்தார். ஆகவே ஒன்று உமார் அதைத்