பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டிடமும் இருக்கைகளும்

15


விலைக்கு வாங்கிய நூல்களைச் சரிபார்த்தல், தொகுத்தல், வகுத்தல், பதிதல் போன்றவை நடைபெறற்குரியது பணிமேசை. இந்த மேசை மேற்குறித்த பணிகளை விரைவாகவும் எளிதாகவும் செய்வதற்கு ஏற்ற முறையில் அமைக்கப்படல் வேண்டும்.

மாணவர்க்கு நூல்களைக் கொடுக்கப் பயன்படும் மேசை நீண்ட சதுரமாகவோ ஆங்கில யூ (U) வடிவமாகவோ அமைக்கப்படல் வேண்டும். அவற்றின்கீழே இரு மருங்கிலும் இழுப்பறைகள் பொருத்தப்பட வேண்டும். அவற்றில் தண்டப் பணமும், கொண்டுவந்த நூல்களும் பிறவும் வைக்கப்படும். நூலக அதிகாரியின் மேசை நூலகத்தை முழுதும் இருந்தவாறே பார்க்கும் அளவுக்கு அதற்கேற்ற இடத்தில் போடப்பட வேண்டும்.


நூலட்டவணைப் பெட்டிகள்

நூலட்டவணை தயாரித்தல் பலவகைப்படும். அவற்றுள் குறிப்பிடத் தக்கவை இரண்டு. ஒன்று நூல் வடிவிற்று; மற்றென்று, அட்டை வடிவிற்று. இவற்றில் பயன்மிக்கதுபெரும்பான்மையான நூலகங்களில் கையாளப்படுவது அட்டை வடிவமாகும்.

நூலட்டவணை அட்டையின் அகலம் 3 அங். ; நீளம் 5 அங். சிறந்த நூலகத்தின் அறிகுறிகளுள் ஒன்று நூலட்டவணைப் பெட்டி. அட்டவணைப் பெட்டி அறைகள் இழுத்தற்குரியவை. அவை ஒவ்வொன்றின் உள் அகலம் ஐந்தங்குலம்; உயரம் மூன்று அங்குலம்; நீளம் ஒன்றரையடி. நீளம் இருபது அங்குலம்வரை இருக்கலாம். இத்தகைய ஓர் அளவுடைய அறையில் 1,100 அட்டைகள் வைக்கலாம். பொய்ப்புதினமல்லாத நூல் ஒவ்வொன்றுக்கும் மூன்று முதல் ஐந்து அட்டைகள் தேவை. பொய்ப்புதினத்திற்குரிய அட்டை இரண்டுக்குக் குறைதல் நல்லதன்று. ஒரு நூலகத்தில் ஐயாயிரம் நூல்கள் இருந்து