பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

உயர்நிலைப்பள்ளி நூலகம்


6. பேச்சுக்கும் திரைப்படத்துக்கும் உரிய மூலங்கள்.

(இவற்றின் தயாரிப்புக் கல்வித்துறைக்குரியது)

7. செய்முறைக்கூடம்.

8. தொகுத்தலும் வகுத்தலும்.

9. குழந்தை நூலகத் தலைவர், பள்ளி நூலகத்தலைவர் ஆகிய இருவருக்குமுரிய நூலகப்பயிற்சி, கூட்டுறவுப்பயிற்சியாக இருக்க வேண்டுமானல், மேற்கூறிய பாடத்திட்டமும் பட்டப் படிப்பும் இணைக்கப்பட்டுக் கற்பிக்கப்பட வேண்டும்.

இத்தகைய இணைப்புத் திட்டம் பற்றியதொரு சிறந்த அறிக்கையினைப் 'பிரிட்டன்' நூலக மன்றமும் பள்ளி நூலக மன்றமும் சேர்ந்து தயாரித்துள்ளன.

அந்த அறிக்கையின் பாடத் திட்டம் பின்வருமாறு:-


1. தனிப்பட்ட படிப்பின் சிறப்பு

1. தற்காலத்தில் பள்ளிநூலகம் பற்றிய கருத்து மிகவும் விரிவடைந்துள்ளது. இதற்குமுன்பு நூலகப்படிப்பு இலக்கணப் பள்ளியின் ஆரும் படிவத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. தற்போதோ எந்தப்படிவத்துடனே, வகுப்புடனே அது சேர்க்கப்படும் பழக்கம் நிலவி வருகிறது.

2. மாணவர்களுக்குப் பாடத்துக்கு வேண்டிய அத்துணை நூல்களையும் குறிப்புக்களையும் நூலகம் வழங்கும்பொழுது அதன் இன்றியமையாச் சிறப்பு தானகவே உணரப்படுகிறது. மாணவர்க்குப்