பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல்களைப் பொறுக்கலும் வழங்கலும்

41


பயன்படத் தக்கதாகும். 1940- ஆம் ஆண்டில் மட்டும் பதினன்கு நூலட்டவணைகள் நாட்டு நூலகமன்றம் தயாரித்து உள்ளது. அதில் ஆயிரம் தலைப்புக்கள் அடங்கி யுள்ளன. பள்ளிநூலகமன்றம் இளைஞர்க்கான இனிய நூல்கள் எனும் அட்டவணை தயாரித்துள்ளது. அந்தத் தயாரிப்பு 1936 - இல் நடைபெற்றது. அதில் நாலாயிரம் தலைப்புக்கள் உள. இதுபோன்ற நூலட்டவணைகள் நமது நாட்டில் தயாரிக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். அப்பொழுதுதான் நூலகத் தலைவர்கள் வேண்டிய நூல்களை எளிதில் தெரிந்து வாங்க முடியும். விலை, வெளியீட்டகம், வெளிவந்த ஆண்டு, ஆசிரியர், நூலின் பெயர், பக்கம், நூல்பற்றிய சிறு குறிப்பு ஆகியன அடங்கிய சிறந்த நூலட்டவணை ஒன்று தயாரிக்க வண்டியது உடனடித் தேவையாகும்.


தனிச்சுவையும் பொதுச்சுவையும்


பள்ளி நூலகத்தினைவிடப் பொதுநூலகம் பரந்து விரிந்தது; பல்லாயிரக்கணக்கான நூல்களைக் கொண்டது; பல்லாயிர மக்கள் பயன்படுத்துவது. அதனல் அந்த நூலகத் தலைவர் பெரும்பான்மையான மக்கள் எதை விரும்பிப் படிக்கின்றனரோ அதனையே வாங்கி வைப்பது இயல்பு. அதுவே இன்றியமையாமையுங்கூட. ஆனல் பள்ளிநூலகத்தலேவர் அப்படிப் பொதுச் சுவைக்குரிய நூல்களை மட்டும் வாங்கி வைத்தல் கூடாது. ஒரே வயதுடைய மாணவர்களிலேயே ஒருவருக்கு இலக்கிய நூற்கள் பிடிக்கும்; மற்ருெருவருக்கு நாவல்கள் பிடிக்கும்; வேருெருவருக்குச் சிறுகதை நூல்கள் பிடிக்கும்; இது போன்று ஒரு வகுப்பிலே படிக்கின்ற மாணவரிடையேயும் சுவை வேறுபடுவதுண்டு. என்ருலு| இவ்வளவு வேறுபட்ட மாணவரும் விரும்பிப் படித்தாக வேண்டி