பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

உயர்நிலைப்பள்ளி நூலகம்


1. நூல் வாங்கல்


ஆசிரியர்கள், தலைமையாசிரியர் ஆகியவர்களோடு கலந்த பின் வாங்க வேண்டிய நூல்களின் பட்டியலை மானியத் தொகை அளவுக்குள் அடங்குமாறு பள்ளிநூலகத்தலைவர் தயாரிப்பார். ஒரு நூல் அட்டை ஒன்றில் பதியப்பட்டிருக்குமானல் அதன்மூலம் ஆசிரியரின் பெயர்களை வைத்து அகர வரிசையில் அடுக்கிவிடலாம். ஒவ்வொரு நூலும் நூற் பட்டியலை வைத்து ஏற்கனவே அது வாங்கப்பட்டுள்ளதா என்று சரி பார்க்கப்படும். ஒரே நூல், ஒன்றுக்கு மேற்பட்ட படிகள் வாங்கப்பட வேண்டுமானல் நூற்பட்டியலை வைத்து அதில் எத்தனை படிகள் ஏற்கனவே உள்ளன என்பது சரி பார்க்கப்படும். இவ்வாறு சரி பார்க்காமல் நூல்கள் வாங்கப்படுமானல் அவ்வாறு வாங்கப்பட்டவை பயன்படாது போகும். மேலும் வாங்கப்பட வேண்டியவை போக எஞ்சிய நூல்களின் பெயர்களே - அஃதாவது முன்பே வாங்கப்பட்ட நூல்களின் பெயர்களை - அட்டவணையிலிருந்து நீக்கி விடவேண்டும்.

இவ்வாறு செய்தபின் நூல் வாங்குவதற்குரிய ஆணைகளைத்தயாரிக்க வேண்டும். ஆணைகளைப் பதிப்பாளர்க்கு அனுப்புகையில், நூல்கள் அனுப்ப வேண்டிய நாள், கழிவு முதலியவற்றையுங் குறித்து அனுப்ப வேண்டும். நல்ல நிலையிலுள்ள பழைய நூல்களையும் வாங்கலாம். இதனால் பணம் மிச்சமாகும்.

மூன்று ஆணைகளைத் தயாரிக்க வேண்டும். ஒன்று நூலகத்தில் இருக்க வேண்டும். எஞ்சிய இரண்டையும் பதிப்பாளர்கட்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்புகையில் ஒன்றில் 'விலையுடன் அனுப்புக' என்று எழுதி அனுப்ப வேண்டும். நூல்களும் விலைச்சீட்டுக்களும் வந்தபின்னர்