பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலக ஆட்சி

49


அலமாரிகளில் அடுக்கி வைத்தலாகும். இதற்காக வழக்கத்திலுள்ள ஒரு சிறந்த பொதுமுறையை மேற்கொள்ள வேண்டும். எங்த முறையை மேற்கொண்டாலும் ஒரு பாடத்திற்குரிய தொடர்புடைய நூல்கள் எல்லாம் ஒரே இடத்தில் அடுத்தடுத்து இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். சிறந்த முறையில் நூல்கள் அடுக்கப்பட்டால்தான் படிப்பவர்க்கு எளிதிலே நினைத்த நூல்களை எடுக்க வசதி ஏற்படும். நூல்களை அடுக்க, எடுக்க, பொறுக்க, தள்ளநூலை வகைப்படுத்தும் முறையே (Classification) சிறந்த காரணமாக அமையும்.

நூலே வகைப்படுத்தும் முறைகள் பல உள்ளன. 'எனினும் டூயி' முறையும், 'கோலன்' முறையும் சிறந்தனவாகப் போற்றப்படுகின்றன. 'கோலன்' முறையை உலகிற்கு உவந்து அளித்தவர் தமிழ்நாட்டு நூலகக் கலை அறிஞர் டாக்டர் S.R.ரங்கனாதன் ஆவார். 'டூயி' முறையை வகுத்தவர் அமெரிக்க அறிஞர் மெல்வெல் டூயி (MelvilDewey) ஆவார். இவரது வகைப்படுத்தும் முறை மிகவும் எளிமையானது. எனவே உலகில் பெரும்பான்மையான நூலகங்களில் இம்முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் நம் நாட்டுப் பொருட்பாகுபாடுகள், மொழிகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும் வண்ணம் இம் முறை காணப்படவில்லை. மேலும் நாள்தோறும் வளரும் மதிபோன்று வளர்ந்து வரும் அறிவியல் துறைகள் அனைத்திற்கும் இம்முறையில் குறியீடுகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். இத்தகைய ஒருசில குறைபாடுகள் இம் முறையில் இருப்பினும் முன்னர்க் கூறியது போன்று உலக நாடுகள் பல இம் முறையைப் போற்றிப் புகழ்கின்றன. நம் நாட்டுப் பொருட்பாகுபாடுகள், மொழிகள், சமயங்கள் ஆகியவற்றிற்கு ஏற்றதாகவும், அதே நேரத்தில் உலக நாடுகள் அனைத்தும் மேற்கொள்ளத் தக்கதாகவும் 'கோலன்' முறையை டாக்டர் ரங்களுதன் வகுத்துத் தந்து நூலகத் துறையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தினர். 4.