பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

உயர்நிலைப்பள்ளி நூலகம்


வேண்டும். அப்படியானல் அதனை எப்படிச் சேர்ப்பது? முதலில் நூல் எதனைப் பற்றியது என்பதைத் தெரிதல் வேண்டும். வரலாரு? கதையா? இலக்கியமா? இலக்கணமா? மொழி இயலா? எனப் பார்த்தல் வேண்டும். இவ்வாறு பார்த்தபின் அது மொழியியலாயின் பின்னர் அது ஒலியைப்பற்றியதா? சொல்லைப் பற்றியதா? தொடரைப் பற்றியதா? என்று பார்க்க வேண்டும். இவ்வாறு பார்த்துப் பார்த்து நூல்களை வைத்தால்தான் நூல்கள் உரிய இடத்தில் சரியான முறையில் அமையும். மேலும் நூலின் பயனைப் பற்றியும் ஆராய வேண்டும். அது பலராற் படிக்கப் படுவதாயின் கண்ணிற் பார்க்கும் இடத்தில் வைக்க வேண்டும்; இல்லையாயின் சற்று ஒதுக்கும் புறமாக வைத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அதை எளிதில் எடுக்க முடியும். நூலடுக்கல் என்பது பொழுது போக்கன்று; நூலகத்தலைவரின் திறமைக்கும், நூலகத்தின் தகுதிக்கும், படிப்பாரின் வருகைக்கும் பெருமை தரும் நற்சான்றிதழ் ஆகும். இந்த நற்சான்றிதழைப் பெற வேண்டுமானல் சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் நூலகத்தலைவர் அடிக்கடி நூல்களை வகுத்து அடுக்கிப்பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யாவிடில் நூலகம் பழைய நூற்கடையாகவே காட்சியளிக்கும். பழக்கத்தினல் அனுபவ அறிவைப் பெற மனமில்லாது, நூலக வகைப்படுத்தும் அகராதி மூலம், நூலக வகைப்படுத்தும் முறையை அறிய விரும்புவது தேனையுண்ணுது, தேன் என்று எழுதிய தாளைச் சுவைக்க விரும்புவது போலாம். நூலக வகைப்படுத்தும் அகராதியிற் கொடுக்கப்பட்டிருக்கும் எண் முறைகள் சில வேளைகளில் சில நூல்களுக்குப் பொருந்தாமல் போகலாம். எடுத்துக்காட்டாகத் தமிழிலக்கிய வகையைக் கொள்ளலாம். 'டூயி' முறை பத்து வரையில்தான் உள்ளது. ஆனல் தமிழிலக்கிய வகை அந்தப் பத்தினையும் தாண்டிவிடும். மேலும் எழுத்தாளர்கள் தங்கள் கருத்தோவியங்களைத் தீட்டுகையில் நூலக வகைப்படுத்தும் எண் முறையினை மனத்திற் கொள்வதில்லை. அதனல் ஒவ்வொரு நூலையும் அதனதன்