பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

உயர்நிலைப்பள்ளி நூலகம்


நூல்களின் முதுகு நமக்குத்தெரியும் வண்ணம் நெட்டுவசத்தில் நூல்களை அலமாரியில் அடுக்கவேண்டும். அதுமட்டுமன்று; நூல்களை நெருக்கமாக மூடைகளைப்போல அடைந்து வைக்கக் கூடாது. இதனல் நமது முழு பலத்தையும் பயன்படுத்தி நூலை எடுக்க வேண்டியிருக்கிறது. அதுபோழ்து நூல்கள் கிழிய வாய்ப்பு நிச்சயம் உண்டு. நூலகத்தலைவர் தைப்புக்குச் சென்ற நூல்களின் கணக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அதிலே ஆசிரியரின் பெயர், நூலின் பெயர், நூல் எண், தைப்புமுறை, தையற்கூலி ஆகியவை பதியப் பட்டிருக்க வேண்டும்.

நூல்களோடு பருவமலர்களின் மணமும் நூலகத்தில் கமழ வேண்டும். அப்போதுதான் அன்ருட அறிவுலகக் கனவுகளை மாணவர்கள் காணமுடியும். ஓரிரு நாளிதழ்கள், இரண்டு வார மலர்கள், மூன்று மாத வெளியீடுகள் வாங்கிப் போட்டாற் போதும். இவற்றுக்கென மானியத்தில் இருபது விழுக்காடு ஒதுக்கினல் நல்லது. பருவமலர்கள் எல்லாவற்றையும் தொகை செய்தால் அது யானை விலையாகிவிடும் அதனல் சிறந்தவற்றைத் தொகுத்து வைத்துக்கொண்டாலே போதும்.


ஆண்டுக் கணக்கெடுத்தல்

நூலகத்தின் இருப்புக்களை அறிய உரிய முறை நூலகத்தின் (Stock Verification). ஆண்டுக்கணக்கைக் கோடை விடுமுறை தொடங்குமுன் எடுத்தல் நலம். அதற்குமுன் சிற்சில மாதங்கட்கு ஒரு முறை கணக்கு எடுத்தலும் வேண்டும். ஆனல் அதனல் அவ்வளவு நன்மை ஏற்பட்டுவிடாது. ஒழுங்காகவும் கவனமாகவும் நூலகத்தார் கொடுத்து வாங்கி உரிய இடத்தில் வைப்பார்களானல் நூல்கள் அதிகமாகத் தொலையாது. நூல் தொலையாமல் இருத்தல் இந்த உலகில் எந்த நூலகத்திலும் இல்லை. அதனல் நூலகத்தில்