பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

உயர்நிலைப்பள்ளி நூலகம்


நூலகத்தைப் பயன்படுத்தும் விதங்களைத் தெரியப்படுத்தினல் ஒழிய நூலகம் உரிய முறையில் செயல்படாது. பள்ளி கடந்து கல்லூரிக்குள் நுழைந்து பட்டம் பெற்றவர்களே வேண்டிய நூல்களை எடுக்க முடியாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது பள்ளி மாணவர்கள் நூலகத்திலே படும்பாட்டை என்னென்பது! எனவே, பள்ளி மாணவர்க்கு நூலகத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிச் சொல்லித்தரல்வேண்டும். இதற்காக ஒவ்வொரு வகுப்புக்கும் வாரத்தில் ஒரு மணி நேரம் - நூலக நேரமாக ஒதுக்க வேண்டும்.

முதலில் நூலகத்தலைவர் பன்ளிநூலகத்தின் பயனைக் கூறி, நூலகத்திலுள்ள நூல் வகைகளைப்பற்றிச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லிய பின், படத்தின் மூலம், நூலகத்தின் உட்பிரிவுகளையும், அவைதம்முள் உட்பிணைந்திருப்பதையும் அவர் மாணவர்க்கு விளக்கல் வேண்டும். இதன்பின்னர், நூல்களை வகுத்திருக்கும் முறை, அடுக்கியிருக்கும் முறை, நூற்பட்டியல், அதிலே நூல்கள் எழுதப்பட்டிருக்கும் வரிசை, ஒவ்வொரு நூலைப்பற்றியும் கொடுக்கப்பட்டிருக்கும் சிறுகுறிப்பு, நூல் தட்டில் நூல் இருக்கும் இடத்தைக் காட்டும் எண், நாட்டுப் படங்கள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், ஆண்டு நூல்கள், அரசறிக்கைகள், வெளியீடுகள், அருஞ்சொல்லகராதிகள் ஆகியவற்றின் பயன், நூல் கடன் முறை, நூலகவிதிகள் ஆகியவற்றையும் நூலக அதிகாரி மாணவர்க்குக் கூறவேண்டும்.

நூலக வகுப்பில் வினப்பல கேட்க உரிமை வேண்டும். மாணவர்கள் எத்தனை கேள்விகள் கேட்டாலும் சலிக்காமல் விடை கூறவேண்டும். நூலக நேரத்தில் செய்முறையே அதிகம் நடைபெற வேண்டும். ஒவ்வொரு நாளும் தாங்கள் நூலகத்தில் செய்ததை மாணவர்கள் தமது நாட்குறிப்பில் குறித்தல்