பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்க நூலகம்

79


வேண்டும். நூல்களை எண்ணின்படி வரிசையாக அடுக்கல், நினைத்த நூலைத் தயங்காது எடுத்தல், இடம் மாறி வைக்கப்பட்ட நூல்களை எடுத்து உரிய இடத்தில் வைத்தல், நூல்களுக்குத் தாள்நறுக்கு ஒட்டல், குறிப்பு நூலிலிருந்து குறிப்பெடுத்தல், சிதைந்த நூல்களைச் சீர்படுத்தல் ஆகியவை மாணவர்கள் செய்து பார்க்க வேண்டியவையாகும். இப்பணிகளில் பெரிய வகுப்பு மாணவர்கள் சிறிய வகுப்பு மாணவர்களுக்கு உதவி செய்யலாம். சிறிய வகுப்பு மாணவர்கள் ஏதேனும் கட்டுரைகள், மலர்கள் தயாரிக்க வேண்டுமானல் பெரிய வகுப்பு மாணவர்கள் அதற்கு வேண்டுவன செய்து உதவலாம்.

நூல்களை நல்ல முறையில் பிள்ளைகள் பயன்படுத்த வேண்டுமானல் அதன் பல்வேறு பாகங்களைப் பற்றியும் நூலகத்தலைவர் கற்பிக்க வேண்டும். ஒரு நூலானது பலரது உழைப்பினல் உருவாக்கப்படுவது. நூலாசிரியர், அச்சகத்தார், பதிப்பகத்தார், அச்சுத் தொழிலாளர் முதலிய பலரது கைகள் அதிலே படவேண்டும். அப்பொழுதுதான் அது உருவாகும். எனவே, அட்டை, பொருளடக்கம், முன்னுரை, மதிப்புரை, அரும்பொருள் அகராதி ஆகிய அத்தனையும் ஒரு நூலின் சிறப்புக்கு உதவுவனவாகும்.

மேற்கூறிய அத்தனையும் தெரிந்தாலொழிய பிள்ளைகள் நூலகத்தைச் சரியான முறையில் பயன்படுத்த மாட்டார்கள். மாணவர்க்கு ஏற்ற பல நூல்கள் நூலகத்தில் இருந்தும் அவர்கள் அவற்றைப் படிப்பதில்லை. அதற்குக் காரணம் அவற்றின் சுவையும், இருக்கும் இடமும் தெரியாததே. எனவே நூலகமணியின் முக்கியமே மாணவர்க்கு அவற்றை அறிவிப்பதே.

ஒவ்வொரு நூலகத்துக்கும் விதிகள் வகுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்கள் நூலகத்தை நல்ல முறையில்