பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

உயர்நிலைப்பள்ளி_நூலகம்

யுறுத்தப்பட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளி நூலகத்தின் சிறப்பை உணர்ந்திட வேண்டுமானல் நமது நாட்டுச் சமுதாய அமைப்பை நாம் அறிதல் முதலில் தேவை. தற்போதைய இந்திய அரசியல் சட்டத்தின்படி மாநில அரசாங்கமே கல்விக்கு முழுப் பொறுப்பு உடையதாகும். என்ருலும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் அருமையையும் பெருமையையும் உணர்ந்த இந்திய அரசியலார் தாமே அக்கல்வியினை வளர்க்க முன்வந்திருக்கிருர்கள். அதன் அறிகுறியே உயர்நிலைப் பள்ளிக் கல்விக்குழு ஏற்படுத்தி அறிக்கை தயாரிக்கச் செய்தமையாகும். அந்த அறிக்கையிலே உயர்நிலைப் பள்ளியில் நூலகம் அமைக்க வேண்டியதன் இன்றியமையாமையை யுணர்த்தும் பகுதி வருமாறு : —

"தற்போது வகுத்திருக்கும் உயர்நிலைப் பள்ளிக் கல்விமுறை, மாணவர்கள் தமது தகுதிக்கேற்ற வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுக்கவும், எடுத்த முறையைச் செம்மையான வகையிலே தழுவிச் செயல்படவும், பின்னர் எதுபற்றியும் சிறந்த ஆதாரங்களின் அடிப்படையிலே சிந்தித்து முடிவு செய்யவும் ஆக்கம் அளிக்கும் வன்மையுடையதாகும். இத்தகைய கல்விமுறை வெற்றி பெறவேண்டுமானல் மாணவர்களுக்குப் பரந்த அறிவும், சிறந்த படிப்பும் தேவை. இவையிரண்டும் மாணவருக்கு வாய்க்க வேண்டுமானல் நூல்கள், பருவ வெளியீடுகள், நாளிதழ்கள், துண்டு வெளியீடுகள் படங்கள், திரைப் படங்கள் ஆகியவை கொண்டதொரு நூலகமும், இந்த நூலகத்தைச் செம்மையான முறையிலே இயக்கவல்ல பயிற்சி பெற்ற நூலக அலுவலரும் இன்றியமையாதது. எந்த வகையான நூலகமோ, நூலோ இல்லாமல் தற்காலத்தில் சிறந்த கல்விமுறை எதனையும் செயல் படுத்த முடியாது."

இவ்வாறு உயர்நிலைப் பள்ளிக் கல்விக்குழுவின் அறிக்கையில் நூலகத்தின் சிறப்பினைத் தெளிவாக உணர்த்தும் பகுதிகள் பல காணப்படுகின்றன. அவற்றினை நோக்குவோர்க்கு உயர்