பக்கம்:உயிரின் அழைப்பு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

6 பக்கமே திரும்பமாட்டேன். நட, வந்த வழியைப் பார்த்துக். கொண்டு," என்று வார்த்தையாக சொல்லவில்லை சிம்ம கர்ஜனையாகக் கர்ஜித்தாள் வாலாம்பாள். பரஞ்சோதி அலறிப் போனான்! வாய் குழற "அம்மா, பதறாதீங்கம்மா. தெய்வத்தோடு கூட நாம் போட்டி போடலாமா தாயே? அவ சன்னதியிலே, நின்னுமுறையிட்டது ஒரு நாளும் வீணாப்போவாதும்மா, குழந்தைக்கு வாழ்வு குடுத்தாவணுமே அவ!..." என்றான். "எப்போ? ஏழு வருஷ காலமா என் குழந்தை பூவும். மணமுமாக இருக்க வேண்டிய நாளிலே, விரதமும், பட்டினி யும் கிடந்து மக்கி மடிகிறதுடா மடிகிர்து! அதைப் பார்த்துப் பார்த்து மாபாவி நான் சகிக்கிறேன் ! இதைவிட எனக்கு துக்கம் வேறென்ன வேணும் ? தெய்வமாம், பூசையாம், பாவாடையாம், தாவானியாம், போ பேசாமல். நினைக்க நினைக்கப் பத்தியெரிகிறது எனக்கு. ஆமா! நிக்காதே, நட வெளியே" என்று கூறியபடி, அழுகையும் ஆத்திரமும் கொண்டு கம்பிக்கதவை அறைந்து சாத்திவிட்டு உள்ளே போய் விட்டாள் வாலாம்பாள் ! அடிவாங்கிய வாயாக அடங்கி செயலிழந்து படியிறங்கி நடந்தான் பரஞ்சோதி! ஆத்தா? அதுந்து பேசி அறியாத அம்மாவா இப்பிடி காளியாத்தாளா மாறி கனல் தெறிக்க முளிச்சு, அனல் பறக்கப் பேசினாங்க?ஆனா- அவங்கமேலே என்ன தப்பு?" நடை தள்ளாட உள்ளம் துடிக்க ஆலயத்தை நோக்கி நடந்தான் பரஞ்ஜோதி. அவன் திருவையாறுடைய அப்பனுக்கும், அம்மைக்கும் புஷ்பப்பணி புரியும் பக்தன். ஏகாங்கி, பாரமார்த்திக உள் ளம் படைத்த உத்தமன். நேரமெல்லாம், நீர்மலி வேணி யனையும், தர்மாம்பிகையையும் நினைந்துருகும் நெஞ்சினன். தன் தாயாக நினைத்து அன்பு கலந்த பக்தியோடு அவன் தொழும் அம்பிகையின் சன்னதியில் வந்து நின்றான்!