பக்கம்:உயிரின் அழைப்பு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

7 66 தாயின் மீது வாலாம்பாள் ஏற்றிய பழிக்காற்றாது கண்ணிரண்டும் மாரிபொழிய பெருங்குரலெடுத்து, அடி அம்மே, என்னைப் பெத்தாளே; இது என்ன அநியாயமடி; உன் மேலே குத்தம் சொல்லி பழியேத்தறப்போ, பதில் சொல்ல வகையில்லாம, வாயடச்சு நின்னுட்டு, உன் கிட்டே ஓடியாந்திருக்கேண்டியம்மா! பெண்பாவம் பொல்லாதும் பாங்களே - உனக்கு அது தெரியாதோ? ஏழு வருஷமா, உன் மின்னே நெய் விளக்கேத்தி வச்சு, நின்னு, வாழ்வுப் பிச்சை கேக்குதே அந்தப்பொண்ணு- நீ வாயை மூடிக்கிட்டு நின்னயானா அதுக்கு என்ன அர்த்தம்? அவங்க மக வாழ்வு மணம் பெறணும்னு, எவ்வளவு பூபந்தல், பூப்பாவாடையா உனக்குச் சொரிஞ்சிருக்கணும்? நினைச்சுப் பாத்தியா நெஞ்சிலே? "வேணாம்டிதாயே, வேணாம்! பழியேத்துக்காதே! பாவம் அந்தப் பொண்ணுக்கு வாழ்வு குடு. தயங்காதே! அது கால் தேய உன்னை வலம் வந்தது. கைநோக பூபறிச்சு மாலை கட்டி கொடுத்திருக்கு, கண்ணீராலே உன் சன்னதியை மெழுகியிருக்குடீ ! சும்மாயில்லே! நீயும் ஒரு பெண்ணாச்சே, உன் மனசு ஏன் எரங்கலை? ஏண்டியாத்தா இரங்கலை..." என்று கூப்பாட்டுடன் சோகம் தாளாமல் மூர்ச்சித்து விழுந்தான் பரஞ்சோதி ! 3 பரஞ்சோதியை வைது தீர்த்த மறுநாள் அதே நேரத்திற்கு, தப தப வென்று வாசற்கதவைத் தட்டினாள் கோகிலம். "யாரது,கதவைப் போட்டு இப்படி உடைக்கிறது ?* என்று முனகிக் கொண்டே வந்து கதவைத் திறந்தாள் வாலாம்பாள் ! வாலு, கும்பகோணத்திலிருந்து எங்க ராஜி வந்திருக்கா! உங்க சம்பந்தியம்மாளுக்கு உடம்பு ரொம்ப ஜாஸ்தியாயிருக் காம்! மாட்டுப் பொண் முகத்தைப் பார்த்துட்டுப் பிராணனை