பக்கம்:உயிரின் அழைப்பு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

9 "பொய்யில்லை சம்மந்தியம்மா, நிஜம்மா உங்க நாட்டுப் பெண் தர்மு தான் வந்திருக்கா, கண்ணைத் திறந்து பாருங்கோ !" என்றாள் வாலாம்பாள் அருகில் குனிந்து. திண்ணையிலிருந்து உள்ளேவந்த நாகசாமி, "நிஜம்தான் ஞானம், உன் நாட்டுப்பெண்ணும், சம்பந்தியம்மாவும் வந் திருக்கா கண்ணைத் திறந்து பாரு" என்றார் தலைமாட்டில் நின்று. ஞானாம்பாள் கண்களைத் திறக்க முயன்றாள் முடியவில்லை. ஆங் தர்முவா, தர்முவா வந்திருக்கா சாமா? கண் திறக்கப் படலையே எனக்கு" என்று தவித்தாள் ஞானாம்பாள். நாகசாமி முன் வந்து அம்மா, உன் கையாலே ஒரு உத்தரணி ஜலம் மொண்டு வாயில்விடு, ஈரக்கையால் கண்ணைத்துடை" என்றார் மனைவியின் தாபத்தை உணர்ந்த உணர்வில்! 46 66 கைநடுங்க தர்மு உத்தரணியால் ஜலத்தை மொண்டு மாமியாரின் இதழ்க்கிடையில் வார்த்தாள். ஈரத்துணியால் கண்களை மெல்லத் துடைத்தாள். மீண்டும் ஒரு தடவை உத்தரணி ஜலம் வாயில் விட்டாள். சுவாமிநாதன் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு கனவோ, நினைவோ என்ற பிரமையில் உட்கார்ந்திருந்தான்! மெல்ல கண்களைத் திறந்தாள் ஞானாம்பாள். அருகில் தர்முவும், அவள் தாயாரும் நின்றதை வெறித்துப் பார்த்தாள்! வாலாம்பாள் ஆனந்தக்கண்ணீர் வடிய, "சம்மந்தி யம்மா, உங்கள் சரக்கை உங்ககிட்ட எப்போ ஒப்பிக்கப் போகிறோம்னு கவலைப்பட்டேன், கொண்டு ஒப்பிச்சுட்டேன்! கோகிலத்தின் புண்ணியத்தால் சேதி தெரிஞ்சு அழைச் சிண்டு வந்தேன். இனிமேல் உங்கள் வியாதி தெளிஞ்சிடும் பாருங்கள் " என்றாள் பரவசத்தோடு. ஞானாம்பாளின் முகத்தில் தெளிவு தென்பட்டது!