பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





பறவைகளும் பிராணிகளும் தோன்றின

3 1/2 கோடி வருஷங்களுக்கு முன் பெரிய பெரிய ஊரும் ஜந்துக்கள் மாய்ந்தொழிந்து விட்டன. பலவகைப் பறவைகளும், பாலூட்டி வளர்க்கும் பிராணிகளும் உலகில் நிறைந்தன. தற்காலப் பிராணிகளுக்கும், அவற்றிற்கும் மிகுந்த வித்தியாசம் இருந்தது. குளம்புள்ள ‘உயிந்த தேரி’ யை

யானையின் மூதாதை எனலாம். குதிரைக்கும் அதற்கும் ஒற்றுமை இருந்தது. நாயைப்போன்ற டிரோமோசியான் என்ற ஒருவகை மிருகம் இருந்தது. டில்லோதெரியும் என்ற ஒருவகைப் பிராணியின் பற்கள் எலி, வேலிப்பன்றி இவற்றின் பற்களை ஒத்திருந்தன, குரங்குகளைப் போன்ற ‘ஆர்மடில்லாஸ்’ என்ற பிராணியும், மனிதக் குரங்குகளும் அக்காலத் திலேயே தோன்றிவிட்டன.