இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

உயிரின் தோற்றம்



ஆனால் உயிரின் தன்மை என்ன? அதன் சாரம் யாது.... மற்ற புற உலகப் பொருள்களைப் போல உயிரும் பொருளின் ஓர் உருவமா, அல்லது மனிதனது அறிவிற்கு அப்பாற்பட்டது, அவனது அனுபவத்தால் உணர முடியாததுமான பொருளற்ற ஆன்மா - வா?

உயிர் : பொருள்மயமானது என்றால் அதன் சலனத்தையும் அச்சலனத்தைக் கட்டுப்படுத்தும் விதிகளையும் நாம் கண்டுபிடித்து கட்டுப்படுத்தலாம். உயிர் குடிகொண்டுள்ள பொருள்களையும் கட்டுப்படுத்தலாம்; மாற்றலாம். பொருளல்ல, மனிதன் அறிய முடியாத ஒரு சூட்சுமம் என்றால் நம்மால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது. உயிரின் நடவடிக்கைகளை ஒதுங்கி நின்று காணத்தான் முடியும். ஏனெனில் அதை இயக்குவது நாம் அறிய முடியாத ஒரு சக்தியல்லவா?

[1] பொருளில்லாத ஒரு சூட்சுமமே உயிரென்று ஆதிமுதல் கருதிவருகிறார்கள். ‘ஆன்மா', ‘பரமாத்மா', ‘தெய்வச்சித்தம்', ‘உயிராற்றல்' என்று பலவகையான பெயர்களால் அதனை அழைக்கிறார்கள். அவர்களது கருத்துப் படி பொருள் சலனமற்ற, உயிரற்ற சடம். இச்சடத்தினுள் உயிர் புகுந்தால் அதனை ஆட்டி வைக்கிறது. உயிர் பிரிந்தால் கூடு சக்தியிழந்து சடமாகிறது. சடத்துக்கு, இணைப்பும், உருவமும் அளிப்பது உயிர்தானென்று அவர்கள் கருதுகிறார்கள்.

உயிரைப்பற்றிய சமயங்களின் கொள்கை அடிப்படை மேற்கூறியதே. பல வேறுபாடுகள் மதத்துக்கும் மதத்துக்கும்


  1. கருத்துமுதல்வாதிகள்

(idealisam) கருத்துமுதல்வாதிகள்: பொருளுக்கு இரண்டாவது இடம் கொடுத்து, கருத்துக்கு முதல் இடம் கொடுக்கும் தத்துவத்திற்கே கருத்துமுதல் வாதம் என்று பெயர். ஆத்மீக வாதம், மானலிக வாதம், மணம்முதல் வாதம், கற்பனா வாதம் என்று பலவாறாகச் சொல்லப்படும். உண்மையில் உள்ளது நம்மனம்தான். மனத்தின், எண்ணப் பிரதிபலிப்பே, உலகமும், புறத்தோற்றங்களும், எதார்த்த உலகம், பிரத்யட்ச வாழ்வு இயற்கை ஆகிய இவை அனைத்தும் நம் கருத்தில்தான் உள்ளன. நம் உணர்வில்தான் இருக்கின்றன என்பது கருத்துமுதல் வாதம் ஆகும்.