இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

உயிரின் தோற்றம்


பிராணிகள் அனைத்தும் இன்றிருப்பது போலவே தோன்றின என்பது தான் இன்றுவரை கிறிஸ்தவ மதம் மட்டுமல்ல, எல்லா மதங்களின் கொள்கையுமாகும். நம்மைச் சுற்றியுள்ள இயற்கையில் வாழும் உயிரினங்களைக் குறித்து விரிவாக ஆராய்ந்த பின்னர், “உயிர் உயிரைத் தோற்றுவிப்பது, திடீரென்று உயிர் தோன்றுவது என்ற செய்கைகள் நடப்பதில்லை" என்ற முடிவுக்கு இயற்கை விஞ்ஞானிகள் வந்துள்ளனர். 17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் புழு, பூச்சி, ஊர்வன, தரையிலும் நீரிலும் வாழ்வன போன்ற சிக்கலான உடலமைப்புள்ள உயிரினங்கள், சம்பந்தப் பட்டவரை “உயிர்கள் திடீரென்று தோன்றலாம்” என்ற கொள்கை உண்மையல்ல என்று நிரூபிக்கப்பட்டது. பின்னர் கண்ணுக்குத் தெரியாத துண்ணுயிர்கள் விஷயத்திலும் இக்கொள்கை தவறென்று நிரூபிக்கப்பட்டது இவ்வாறு உயிர் திடீரென்று தோன்றிற்று, என்ற கொள்கை தகர்க்கப்பட்டபின் உயிரின் தோற்றம் பற்றிய மதவாதிகளின் கொள்கையின் அடித்தளமே ஆடிவிட்டது. 19-ஆம் நூற்றாண்டில் இக்கொள்கையின் தலையில் மற்றோர் இடி விழுந்தது. பைபிளில் சொல்லப்பட்டது போல

சகோதரர்கள், ஐ.ஐ.மெச்னிகாவ் ஆகியோர் நிரூபித்தனர். பரிணாம ஏணியில் மேல்படிகளில் நிற்கும் பிராணிகளும், மனிதனும் திடீரென்று தோன்றிவிடவில்லை. உலகத்தில்


  • (Micro organism) நுண்ணுயிர்கள் இவை கண்ணுக்குத் தெரியாதவை, 500 மடங்கு பெரிதாக்கிக்காட்டும் பூதக்கண்ணாடி வழியே நோக்கினால்தான் தெரியும். இவை நம்மைச் சுற்றி தரையிலும், தண்ணீரிலும், காற்றிலும் உள்ளன. வியாதிக் கிருமிகளில் பல சிற்றுயிர்களே.